அதிரடியாக எகிறும் தங்கத்தின் விலை... கலக்கத்தில் நகைப்பிரியர்கள்!

By காமதேனு

கடந்த சில தினங்களாக விலை குறைந்து விற்பனையான தங்கம் நேற்று முதல் மெல்ல உயரத் தொடங்கியுள்ளது. இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, 46,680 ரூபாய்க்கு விற்பனையாவது நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம்

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் காரணமாகவே தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,820 ரூபாயாகவும், ஒரு சவரன் 46,560 ரூபாயாகவும் விற்பனையானது. அதுவே இன்று கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் 5,835 ரூபாயாகவும், சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 46,680 ரூபாயாகவும் விற்பனையாகிறது.

அதேபோல 24 கேரட் சுத்தத் தங்கம் கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து, 6,305 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து, 50,440 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

வெள்ளி

வெள்ளி விலையில் எந்தவிதமான மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 80 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 80,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

தமிழகத்தில் நிலநடுக்கம்... பீதியில் மக்கள்

இன்றும் 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! தலைமையாசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு!

மதுரை ஏவி மேம்பாலத்துக்கு 138-வது பிறந்த நாள்... பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படுமா?

HBD LR Eswari: இசையுலகின் பட்டத்துராணிக்கு பிறந்தநாள்!

முன்னாள் முதல்வர் கேசிஆர் மருத்துவமனையில் அனுமதி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE