மெய்ரா சந்த்... இந்திய வம்சாவளி பெண் எழுத்தாளருக்கு சிங்கப்பூரின் உயரிய கலை விருது!

By காமதேனு

இந்திய வம்சாவளி நாவலாசிரியரான மெய்ரா சந்த், இந்த வருடத்துக்கான சிங்கப்பூரின் மிக உயர்ந்த கலை விருதைப் பெற்றார்.

81 வயதாகும் இந்திய வம்சாவளி எழுத்தாளரான மெய்ரா சந்த் உட்பட, 3 சிங்கப்பூர் எழுத்தாளர்களுக்கு நாட்டின் உயரிய கலை விருதான, கலாச்சாரப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

எழுத்தாளர்களின் கலைத் திறன் மற்றும் நாட்டின் கலை மற்றும் கலாச்சாரத்தை வளப்படுத்துவதற்கான பங்களிப்பு உள்ளிட்டவற்றை அங்கீகரிக்கும் வகையில், சிங்கப்பூரின் மிகவும் மதிப்புமிக்க கலை விருதான கலாச்சாரப் பதக்கம் வழங்கப்படுகிறது.

மெய்ரா சந்த்

செவ்வாயன்று இஸ்தானாவில் நடைபெற்ற விழாவில் சக நாவலாசிரியர் சுசென் கிறிஸ்டின் லிம் மற்றும் மலாய் நாட்டு நடனக் கலைஞர் ஒஸ்மான் அப்துல் ஹமீத் ஆகியோருடன் இந்திய வம்சாவளியான மெய்ரா சந்த் இந்த விருதினைப் பெற்றார். சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் விருதாளர்களுக்கு விருதினை வழங்கி கௌரவித்தார்.

இந்திய மதிப்பில் சுமார் ரூ.49 லட்சம் வெகுமதியும் இந்த விருதில் அடங்கும். 1997-ம் ஆண்டு ஹோ மின்ஃபோங்கிற்குப் பிறகு, சிங்கப்பூர்வாசியான மீரா சந்த் இந்த விருதைப் பெற்ற ஆங்கில மொழி பெண் எழுத்தாளராக பெருமை பெறுகிறார். முன்னதாக 1986-ல் வெளியான இவரது 'தி பெயின்டட் கேஜ்', புக்கர் பரிசுக்காக பட்டியலிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சுவிஸ் தாய் மற்றும் இந்திய தந்தைக்கு மகளாக லண்டனில் பிறந்ததின் மூலமாக, மெய்ரா சந்த் இந்திய வம்சாவளியாக அடையாளம் காணப்படுகிறார். 1962-இல், அவர் தனது இந்தியக் கணவருடன் ஜப்பானுக்குச் சென்றார், அங்கு ஒரு சர்வதேச பள்ளியில் கலைப் பாடங்களை கற்பித்தார். 1971-ல் ஜப்பானை விட்டு மும்பைக்கு சென்றவர், இந்தியாவில் ஐந்து ஆண்டுகளை செலவிட்டபோது எழுதத் தொடங்கினார்.

மெய்ரா சந்த்

இந்தியாவில் செலவிட்ட காலம் தனது வாழ்க்கையை மாற்றும் அனுபவத்தை தந்ததாக அவர் தெரிவித்திருக்கிறார். "என் வாழ்க்கையில் முதன்முறையாக, நான் அறிந்திராத ஒரு பாதியை சந்தித்தேன். அந்த அனுபவத்தை எழுத்தின் மூலம் புரிந்து கொள்வதன்றி வேறு வழி அப்போது தென்படவில்லை" என்று தனது எழுத்து பிறந்த பின்னணியை நினைவுகூர்கிறார்

கடந்த வருடம், தமிழரான இந்து அரவிந்த் குமாரசாமிக்கு இந்த மதிப்புமிக்க விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ்... மீண்டும் புழல் சிறையில் அடைப்பு!

ஹஜ் பயணத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு! டிசம்பர் 20 கடைசி நாள்!

துணை நடிகை தற்கொலை; புஷ்பா பட நடிகர் ஜெகதீஷ் கைது!

தொழில்நுட்ப கோளாறால் விமான நிலையத்தில் 15 மணி நேரம் தவித்த பயணிகள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE