மெல்ல உயரும் தங்கம் விலை... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

By காமதேனு

நேற்று விலை குறைந்து விற்பனையான தங்கம், இன்று சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து 46,560 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் மீண்டும் மெல்ல உயரத் தொடங்கியுள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம்

நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,815 ரூபாயாகவும், ஒரு சவரன் 46,520 ரூபாயாகவும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் 5,820 ரூபாயாகவும், சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 46,560 ரூபாயாகவும் விற்பனையாகிறது.

அதேபோல 24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, 6,290 ரூபாய்க்கும், சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து, 50,320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி

வெள்ளி விலை 1 ரூபாய் குறைந்து கிராம் வெள்ளி 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி 80,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் காரணமாகவே தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...


டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ்... மீண்டும் புழல் சிறையில் அடைப்பு!

ஹஜ் பயணத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு! டிசம்பர் 20 கடைசி நாள்!

துணை நடிகை தற்கொலை; புஷ்பா பட நடிகர் ஜெகதீஷ் கைது!

தொழில்நுட்ப கோளாறால் விமான நிலையத்தில் 15 மணி நேரம் தவித்த பயணிகள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE