சென்னையில் பனிமூட்டம்... விமான சேவைகள் பாதிப்பு!

By காமதேனு

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள நீர் பல இடங்களில் வடியாத நிலையில், இன்று பனிமூட்டம் ஏற்பட்டது. இந்த மோசமான வானிலை காரணமாக சென்னையில் விமான சேவை முடங்கியது. குறிப்பாக உள்நாட்டு விமானங்கள் தாமதமாக புறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை விமான நிலையம் நீர் நிலையம் போன்று காட்சி அளித்தது. விமான நிலையத்திற்குள் வெள்ளம் புகுந்ததால், விமான சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டன. வெள்ளம் வெளியேற்றப்பட்ட நிலையில், விமான சேவைகள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பின.

இந்நிலையில், மீண்டும் பனி மூட்டம் காரணமாக சென்னையில் விமான சேவை முடங்கியது. குறிப்பாக உள்நாட்டு விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. தரையிறங்க வேண்டிய விமானங்களோ வானில் வட்டம் அடித்தப்படியே சுற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை - மடிப்பாக்கம்

குறிப்பாக, கோவையில் இருந்து 118 பயணிகளுடன் காலை 7.20 மணிக்கு சென்னையில் தரையிறங்க வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ், ஹைதராபாத்தில் இருந்து 127 பயணிகளுடன் காலை 7.30 மணிக்கு தரையிறங்க வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ், கொல்கத்தாவில் இருந்து 148 பேருடன் காலை 7.35 மணிக்கு தரையிறங்க வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ், வானில் வட்டம் அடித்துக் கொண்டே இருந்ததாகவும், வானிலை ஓரளவு சீரானதும் தரையிறங்கியதாகவும் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE