சென்னை சென்ட்ரல் - திருத்தணி மின்சார ரயில் சேவை மீண்டும் துவங்கியது

By காமதேனு

மிக்ஜாம் புயல் மற்றும் மழை, வெள்ள பாதிப்பால் தடைபட்டிருந்த சென்னை சென்ட்ரல் - திருத்தணி இடையேயான மின்சார ரயில் சேவை இன்று காலை முதல் மீண்டும் துவங்கியது.

சென்னை பேசின்பிரிட்ஜ் பகுதியில் தண்டவாளத்தை சூழ்ந்த வெள்ளம்

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த வரலாறு காணாத மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சென்னையில் சாலைகள், குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின. இதேபோல், ரயில் தண்டவாளங்களும் மழை வெள்ளத்தில் மூழ்கின. விமான நிலைய ஓடுதளத்திலும் மழை வெள்ளம் புகுந்து விமான சேவை பாதிக்கப்பட்டன.

கடந்த 4ம் தேதி அன்று சென்னையில் பஸ், ரயில், விமானம் என அனைத்து போக்குவரத்து சேவையும் முடங்கியது. இதன் காரணமாக சென்னையில் உள்ள மக்கள் வெளியூர் செல்ல முடியாமல் சிக்கிக் கொண்டனர்.

மழை நின்று 3 நாள்கள் ஆன பிறகும் சென்னை, திருவள்ளூர் பகுதிகள் இன்னும் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. வெள்ள நீர் படிப்படியாக வடிந்து வருவதைத் தொடர்ந்து பேரிடர் பாதிப்பு அகல துவங்கியுள்ளது. இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருத்தணி வரை செல்லும் புறநகர் மின்சார ரயில் சேவை இன்று காலை முதல் மீண்டும் வழக்கம்போல் இயக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. புறநகர் ரயில் சேவை மீண்டும் துவங்கியதை தொடர்ந்து பொதுமக்கள், பயணிகள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ்... மீண்டும் புழல் சிறையில் அடைப்பு!

ஹஜ் பயணத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு! டிசம்பர் 20 கடைசி நாள்!

துணை நடிகை தற்கொலை; புஷ்பா பட நடிகர் ஜெகதீஷ் கைது!

தொழில்நுட்ப கோளாறால் விமான நிலையத்தில் 15 மணி நேரம் தவித்த பயணிகள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE