ஹோலி பண்டிகைக்காக தமிழ்நாட்டில் சிறப்பு ரயில்கள்... தெற்கு ரயில்வேயின் அதிரடி அறிவிப்பு!

By காமதேனு

ஹோலி பண்டிகையையொட்டி தெற்கு ரயில்வே சார்பில் சென்னை - நாகர்கோவில், நாகர்கோவில் - சென்னை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், ரயில் எண்: 06011 தாம்பரம் - நாகர்கோவில் 25- ம் தேதியும், ரயில் எண்: 06012 நாகர்கோவில் - தாம்பரம் 24- ம்தேதி மற்றும் 31-ம் தேதியும் இயக்கப்படுகின்றன. ரயில் எண்: 06019 நாகர்கோயில் - சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், 24-ம் தேதியும், ரயில் எண்: 06020 சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் 25- ம் தேதியும், ரயில் எண்: 06067 சென்னை எழும்பூர்-நாகர்கோவில் 28- ம் தேதியும் இயக்கப்படுகிறது.

ரயில் எண்: 16382 கன்னியாகுமரி - புனே எக்ஸ்பிரஸ் ரயில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 35 நிமிடம் தாமதமாக புறப்பட்டு செல்லும். ரயில் எண்: 06777 எர்ணாகுளம்-கொல்லம் எக்ஸ்பிரஸ் மற்றும் ரயில் எண்: 06778 கொல்லம்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை நாளை ரத்து செய்யப்படுகிறது என்றும் தெற்கு ரயில்வே செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

இதே போல சென்னை - நெல்லை இடையேயும் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து இன்று இரவு 11:45 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் நாளை காலை 11:15 மணிக்கு நெல்லையை சென்றடையும். மறு மார்க்கத்தில் நெல்லையில் இருந்து 25-ம் தேதி இரவு 10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் 26-ம் தேதி காலை 10 மணிக்கு எழும்பூரில் வந்தடையும். இந்த ரயிலில் படுக்கை வசதி கொண்ட 20 பெட்டிகளும், முன்பதிவில்லாத இருக்கை வசதி கொண்ட இரண்டு பெட்டிகளும் இருக்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE