தமிழகம் முழுவதும் கடும் சரிவில் தக்காளி விலை... உச்சம் தொட்ட இஞ்சி!

By காமதேனு

கடும் உச்சத்தில் இருந்து வந்த தக்காளி விலை, ஒரேயடியாக சரிந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. தமிழகம் முழுவதும் தக்காளியின் விலை அதிரடியாக குறைந்துள்ள நிலையில், பல ஊர்களில் தக்காளி பறிப்பதற்கான கூலிக்கு கூட விற்பனையாகாமல், ஆடு, மாடுகளுக்கு உணவாக தக்காளியைப் போட்டும் அவல நிலைக்கு விவசாயிகள் உள்ளாகியுள்ளனர்.

அதே நேரத்தில் ராக்கெட் வேகத்தில் இஞ்சி, பூண்டு ஆகியவைகளின் விலை உச்சம் தொட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தக்காளி விலை நிலவரம்

தக்காளி விலையைப் பொருத்தவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு 200 ரூபாய் என்ற உச்ச விலையை அடைந்து தற்போது வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய் என்கிற அளவிற்கு பல இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி 15 ரூபாய் முதல் 20 ரூபாய் என ரகம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இஞ்சி

சமையலுக்கு முக்கிய தேவையான இஞ்சி, பூண்டு விலையானது கடந்த சில வாரங்களாக உச்சத்தை தொட்டு வருகிறது. வரத்துக் குறைவு காரணமாக கடந்த ஒரு சில வாரங்களாக 150 முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட இஞ்சி இன்று 220 முதல் 240 வரை விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளியைத் தொடர்ந்து இஞ்சி, பூண்டு விலை அதிகரித்துள்ளது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE