திருமண வரவேற்பில் அதிர்ச்சி கொடுத்த மணமக்கள்... வைரலாகும் வீடியோ!

By காமதேனு

திருமண வரவேற்பு நிகழ்வின் போது மணமக்கள் அலைபாயுதே படத்தின் தீம் மியூஸிக்கிற்கு நடனமாடிய வீடியோ 10 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகி வருகிறது.

பரபரப்பாக சுழலும் வாழ்க்கையில் அவ்வப்போது ரிலாக்ஸ் தேவைப்படுகிறது. அப்படியான நேரங்களில் சமூக வலைத்தளங்கள் நம்மை ஆட்கொள்கின்றன. அதிலும் காதல் ரசம் சொட்டும் வகையிலான வீடியோக்களை இளசுகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக பார்த்து, ஷேர் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இளம் ஜோடி தங்களது திருமண வரவேற்பில் இருவீட்டாரையும், திருமணத்திற்கு வந்தவர்களையும் வியப்பில் ஆழ்த்திய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேடையில் ஏறியவுடன் மணமக்கள் இருவரும் காதல் பாடல்களுக்கு நடனம் ஆட ஆரம்பித்தனர். அதுவும் அலைபாயுதே படத்தின் தீம் மியூஸிக்கிற்கு மணமக்கள் இருவரும் நளினமாக ஆடிய வீடியோ தற்போது இணையத்தில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

மணமகன், மணமகளின் அற்புதமான நடன அசைவுகள் பார்வையாளர்களின் கர்வொலிகளை அள்ளிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE