வடகொரியாவிலும் உருவானது வாரிசு அரசியல்... அதிபரின் டீனேஜ் மகளுக்கு அதிகரிக்கும் செல்வாக்கு

By காமதேனு

பெருமளவிலான அணு ஆயுதங்களுடன் ஒட்டுமொத்த உலகையே மிரட்டிக்கொண்டிருக்கும் வடகொரியாவில், நடப்பு அதிபர் கிம் ஜாங் உன் அரசியல் வாரிசாக அவரது டீனேஜ் மகள் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வடகொரியா வசமிருக்கும் அணு ஆயுதங்கள், அமெரிக்கா, தென்கொரியா மட்டுமன்றி சகல உலக நாடுகளையும் சதா பதற்றத்தில் வைத்துள்ளன. காரணம் அதன் அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அவரது விநோதப் போக்கு.

மகளுடன் கிம் ஜாங் உன்

வடகொரியாவை நிர்மாணித்த இரண்டாம் கிம் சங், தற்போதைய அதிபர் கிம் ஜாங்கின் தாத்தா ஆவர். அடுத்தபடியாக தந்தை இரண்டாம் கிம் ஜாங் வடகொரியா அதிபரானர். பின்னர் நடப்பு அதிபர் கிம் ஜாங் உன்-ஐ தொடர்ந்து அடுத்த அதிபர் யார் என்ற கேள்வி நீண்ட காலமாக தொடர்ந்து வந்தது. தற்போது அதற்கு விடையும் கிடைத்துள்ளது.

கிம் ஜாங்கின் பதின்ம வயது மகள், வட கொரியாவின் அடுத்த அதிபராக முன்னிறுத்தப்படுவதாக அங்கிருந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதிபர் கிம் ஜாங் உன் வாரிசுகள் குறித்து நீண்ட காலமாக ரகசியம் பேணப்பட்டு வந்தது. ஒரு மகன் ஒரு மகள் என 2 வாரிசுகள் இருப்பதாகவும், அவர்கள் வேறு பெயர் மற்றும் அடையாளங்களில் ஐரோப்பிய நாடு ஒன்றில் படித்து வருவதாகவும் சொல்லப்பட்டது.

ஆனால் 10 வருடங்களுக்கு முன்பாக வடகொரியா சென்று திரும்பிய சர்வதேச கூடைப்பந்து நட்சத்திரம் டெனிஸ் ரோட்மேன் என்பவர் கிம் ஜாங் உன் மகள் குறித்த முதல் தகவலை உறுதி செய்தார். தற்போது பதின்ம வயதிலிருக்கும் அந்த பெண், தந்தையின் அனைத்து அரசுப் பயணங்கள் மற்றும் கூட்டங்களிலும் தென்படுகிறார். அவரது நிஜப்பெயர் தெரியாதபோதும், தென்கொரிய உளவு நிறுவனம் சூட்டிய ’ஜூ ஏ’ என்ற அடையாளப் பெயரிலேயே அவர் அறியப்படுகிறார்.

மகளுடன் கிம் ஜாங் உன்

நேற்று முன்தினம் வடகொரியா ஊடகங்கள் அதிபரின் மகளை ’ஹயாங்கடோ’ என்னும், அடுத்த அரசியல் வாரிசுக்கான பட்டத்தில் விளித்து புகழ்ந்திருந்தன. ஜு ஏ முதன்முதலில் 2022-ம் ஆண்டில் தனது தந்தையுடன், கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்படும் நிகழ்வில், அரசு ஊடகங்களால் வெளியுலகுக்கு அறிமுகம் செய்யப்பட்டார். ’கொரியாவின் விடியல் நட்சத்திரம்’ என்ற பட்டத்துடன் அழைக்கப்படும் அதிபர் மகள், ராணுவப் பயிற்சிகள், ஆயுத தொழிற்சாலை ஆகிய விஜயங்களின்போது தந்தையுடன் உலா வருகிறார்.

ஒட்டுமொத்த உலகையும் அணு ஆயுத அச்சத்தில் வைத்திருக்கும் வட கொரியாவின் அதிபர் ரேஸில் அடுத்த வாரிசு முளைத்திருப்பதை மேற்கு ஊடகங்கள் அழுத்தமாக பதிவு செய்து வருகின்றன. ஜூ ஏ காலத்திலாவது வட கொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு முடிவு எட்டப்படுமா என்பதும் அவற்றையொட்டிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாக உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

“இரட்டை இலை எனக்கே கிடைக்கணும் முருகா'!... திருச்செந்தூரில் ஓபிஎஸ் மனமுருகி பிரார்த்தனை!

'குக் வித் கோமாளி' பாலா செய்த தரமான சம்பவம்... வைரலாகும் வீடியோ!

1 முதல் 9-ம் வகுப்பு வரை இறுதித்தேர்வு எப்போது? பள்ளிக் கல்வித்துறை முடிவு!

விதிமுறைகளை மீறி பிறந்தநாள் கொண்டாட்டம்... காங்கிரஸ் எம்எல்ஏ மீது வழக்கு!

நீரை சேமிக்கும் புதுமையான டெக்னிக்... வைரலாகும் ஆனந்த் மஹிந்திராவின் ட்விட்டர் வீடியோ!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE