நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ்... தங்கம் விலை இன்று மேலும் குறைந்தது!

By காமதேனு

கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை திடீரென எகிற தொடங்கியதால் நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் நேற்றும், இன்றும் தங்கத்தின் விலை கணிசமாக குறைந்துள்ளது.

தங்கம்

நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,865 ரூபாயாகவும், ஒரு சவரன் 46,920 ரூபாயாகவும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் 5,850 ரூபாயாகவும், சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 46,800 ரூபாயாகவும் விற்பனையாகிறது.

அதேபோல 24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து, 6,320 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, 50,560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி

வெள்ளி விலை 30 காசுகள் உயர்ந்து கிராம் வெள்ளி 82.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி 82,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE