நாளை ரக்‌ஷாபந்தன்... தங்கைகளுக்கு என்ன கிப்ட் தரலாம்!

By காமதேனு

சகோதரப் பிணைப்பை உறுதி செய்யும் வகையில் கொண்டாடப்படும் ரக்‌ஷாபந்தன் நாளை கொண்டாடப்படுகிறது. அதே வேளையில் உங்கள் சகோதரிக்கு என்ன கிப்ட் பண்ணலாம் என்ற சில ஐடிக்கள்...

ரக்‌ஷாபந்தன் என்பது உடன்பிறப்புகளுக்கிடையே உள்ள உடைக்க முடியாத மற்றும் சிறப்பான பிணைப்பைக் கொண்டாடும் புனிதமான திருவிழா. இந்த விழா ஆண்டுதோறும் சாவான் மாதம், பௌர்ணமி தினத்தில் வருகிறது. இந்நாளில், சகோதர சகோதரிகள் பல்வேறு சடங்குகள் மூலம் ஒருவருக்கொருவர் தங்களது அன்பைப் பரிமாறி, நான் இருக்கிறேன் என்று சகோதரிகளைக் கொண்டாடுகிறார்கள்.

சகோதரிகள் தங்கள் சகோதரரின் கைகளில் ராக்கி கட்டி, அவர்களின் நெற்றியில் திலகம் பூசி, அவர்களின் செழிப்புக்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் பிரார்த்தனை செய்யும் போது, சகோதரர்கள் தங்கள் சகோதரிகளைப் பாதுகாப்பதாகவும், அவர்களை நேசிப்பதாகவும், அவர்களை வணங்குவதாகவும், அவர்களுக்குப் பரிசுகளை வழங்குவதாகவும் உறுதியளிக்கிறார்கள்.

இருப்பினும், நவீன காலத்தில், சகோதரர்களும் தங்கள் சகோதரியின் கைகளில் ராக்கி கட்டுகிறார்கள். சகோதரிகளும் ஒருவரையொருவர் மணிக்கட்டில் ராக்கி கட்டிக் கொண்டு இந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.

பிடித்த ஆடைகள்

உங்கள் சகோதரிக்கு பிடித்தமான கலரில் பிடித்த உடைகளை வாங்கிக் கொடுத்து மகிழலாம். அது ஒருவகையில் உங்கள் சகோதரிக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தலாம்.

ஹோட்டல்

சிலருக்கு விதவிதமான உணவு வகைகள் சாப்பிட பிடிக்கும். நாளை ஒரு நாள் கிச்சனுக்கு விடுமுறை கொடுத்து, சகோதரியோடு, உங்கள் அம்மாவையும் அவர்களுக்கு பிடித்த உணவகத்திற்கு அழைத்துச் சென்று அவர்களை ஆச்சர்யப்படுத்தலாம்.

சுற்றுலா டிக்கெட்

ரக்‌ஷாபந்தன் அன்று உங்களது சகோதரிக்கு பிடித்த இடத்திற்கு செல்வதற்கான டிக்கெட்டை பரிசாக கொடுக்கலாம். இந்த பரிசு இருவருக்கும் இடையிலான பந்தத்தை மேலும் அதிகரிக்கக் கூடும்.

புத்தகங்கள், அறிவுசார்ந்த கேட்ஜெட்டுகள்.

தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் புத்தகங்கள் ஏராளமாக இருக்கின்றன. இவர்களை உங்கள் சகோதரிகளுக்கு பரிசளிக்கலாம்.

போட்டோ ஆல்பம்

உங்கள் சகோதரிக்கு போட்டோ ஆல்பம் பரிசாக கொடுக்கலாம். சிறு வயதில் மகிழ்ச்சியான நிகழ்வின் புகைப்படங்கள் அனைத்தையும் ஒரு ஆல்பமாக போட்டு பரிசாக கொடுக்கலாம். இதில் நீங்கள் இருவரும் சிறுவயதில் இருக்கும் புகைப்படங்களையும் இணைத்து போட்டோ ஆல்பத்தை பரிசாக கொடுக்கலாம்.

மேக்கப் பொருட்கள்

பொதுவாகவே பெண்களுக்கு மேக்கப்பில் ஆர்வம் அதிகம். இதனால் மேக்கப் பொருட்களை உங்கள் சகோதரிக்கு பரிசாக கொடுக்கலாம். லிப் ஸ்டிக், பவுண்டர், கண்மை போன்றவைகளை இருக்கும் ஒரு காம்போவாக பரிசலிக்கலாம்.

ஸ்மார்ட் வாட்ச்

ரக்‌ஷாபந்தன் அன்று சகோதரிகளுக்கு வாட்ச் பரிசாக கொடுப்பது சிறந்த முடிவாகும். அவர்களுக்கு சாதாரண வாட்ச்க்கு பதிலாக ஸ்மார்ட் வாட்சை பரிசாக கொடுப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சாக்லேட்

ரக்‌ஷாபந்தன் அன்று ராக்கி கயிறு கட்டும் சகோதரிகளுக்கு சாக்லேட் பரிசாக கொடுக்கலாம். இது உறவில் இனிமையான உணர்வை ஏற்படுத்தும்.

நகைகள்

கம்மல், பிரஸ்லெட், வளையல் போன்ற நகைகளையும் பரிசாக கொடுக்கலாம். இது உறவில் தனித்துவமான பிணைப்பை உணர்த்தக்கூடும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE