தாமதமாகும்... செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

By காமதேனு

திருச்சி - திண்டுக்கல் இடையே நடைபெறும் ரயில்வே மின் பாதை பணிகளையொட்டி, செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில் இன்று மாற்றுப் பாதையில் இயக்கப்படுகிறது என்று ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயில் மயிலாடுதுறையில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு செங்கோட்டை வந்து சேரும். மறு மார்க்கத்தில் செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில் 16848 செங்கோட்டையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு மயிலாடுதுறை சென்று சேரும்.

இந்த ரயில்கள் குத்தாலம், ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், பூதலூர், திருவெறும்பூர் மஞ்சத்திடல், திருச்சி, மணப்பாறை, வையம்பட்டி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த நிலையில் செங்கோட்டையிலிருந்து இன்று காலை புறப்படும் இந்த ரயில் இன்று மட்டும் வழக்கமான பாதையில் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. 'திருச்சி - திண்டுக்கல் பிரிவில் குளத்தூர் - சமுத்திரம் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே மின் பாதைப் பணிகள் நடைபெறுகின்றன.

இதனால், செங்கோட்டையிலிருந்து இன்று புறப்படும் செங்கோட்டை- மயிலாடுதுறை விரைவு ரயில் (16848) வழக்கமான தடத்துக்குப் பதிலாக, விருதுநகர் மானாமதுரை, காரைக்குடி வழியே, 25 நிமிஷம் தாமதத்தில் திருச்சியைச் சென்றடையும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப இன்று இந்த ரயிலில் பயணம் செய்பவர்கள் தங்கள் திட்டத்தை வகுத்துக் கொள்ளலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE