முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்: புதுச்சேரி சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

By காமதேனு

இன்புளுயன்சா காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் புதுச்சேரியில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் கூட்ட நெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவை

புதுச்சேரியில் இன்புளுயன்சா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதேபோல டெங்கு பரவலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அம்மாநில சுகாதாரத்துறை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், இதுதொடர்பாக அம்மாநில சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தொற்று நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும். நாள்பட்ட நோய் உள்ளவர்கள் காய்ச்சல், சளி, இருமல், சுவாசிப்பதில் பாதிப்பு இருந்தால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி சிகிச்சை பெற வேண்டும்’’ என அறிவுறுத்தியுள்ளார்.

அதே நேரத்தில் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE