அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

By காமதேனு

கடந்த சில தினங்களாக கணிசமாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, நேற்று எந்தவிதமான மாற்றமுமின்றி விற்பனையானது. இந்த நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 உயர்ந்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம்

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று எந்த விதமான மாற்றமுமின்றி விற்பனையானது. இந்நிலையில், இன்று சவரனுக்கு ரூ.720 உயர்ந்துள்ளது.

நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,780 ரூபாயாகவும், ஒரு சவரன் 46,240 ரூபாயாகவும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் 5,870 ரூபாயாகவும், சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 46,960 ரூபாயாகவும் விற்பனையாகிறது.

அதேபோல 24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து, 6,340 ரூபாய்க்கும், சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து, 50,720 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி

வெள்ளி விலை 70 காசுகள் உயர்ந்து கிராம் வெள்ளி 82.20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி 82,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் காரணமாகவே தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE