டெல்லியை உலுக்கிய கனமழை: விமான சேவை கடும் பாதிப்பு!

By காமதேனு

நேற்று இரவு கனமழை பெய்ததால் டெல்லிக்கு வரவேண்டிய 16 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

டெல்லி விமான சேவை

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்த நிலையில், டெல்லியில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக காற்று மாசு சற்று குறைந்துள்ளது. ஆனால் கனமழை காரணமாக டெல்லியில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக டெல்லிக்கு வரவேண்டிய 16 விமானங்கள் ஜெய்ப்பூர், லக்னோ, அகமதாபாத் போன்ற நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE