நகைப்பிரியர்களுக்கு 'ஷாக்'... அதிரடியாக உயரும் தங்கத்தின் விலை!

By காமதேனு

ஆபரணத்தின் விலை கடந்த சில தினங்களாக உயர்ந்து வரும் நிலையில், இன்று மேலும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம்

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் காரணமாகவே தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தங்கம் நேற்று ஒரு கிராம் 5,755 ரூபாய்க்கும், ஒரு சவரன் 46,040 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5,780 ரூபாயாகவும், சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 46,240 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே சமயம் 24 கேரட் சுத்த தங்கம், கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து, 6,250 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து, 50,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது

வெள்ளி

வெள்ளியின் விலையில் 1 ரூபாய் 30 காசுகள் உயர்ந்து, 81.50 விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 81,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை வரும் நாட்களில் மேலும் உயரக் கூடும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: 4 இந்தியர்கள் உள்பட 13 பேர் மாயம்!

'நீங்கள் வாங்கும் சம்பளம் யார் போட்ட பிச்சை'? திமுக அமைச்சர்களுக்கு ஆளுநர் கேள்வி!

பதற வைத்த பை... கொலை செய்யப்பட்ட இளம்பெண் உடல் மீட்பு!

சோகம்... குஜராத்தில் மின்னல் தாக்கி 20 பேர் பலி!

வந்தே பாரத் ரயில் மீது சரமாரி கல்வீச்சு: ஜன்னல் கண்ணாடி உடைந்ததால் பயணிகள் அதிர்ச்சி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE