தீப்பற்றி எரிந்த பச்சை வாழை மரங்கள்; தேனியில் பரிதாபம் - சதிவேலை காரணமா?

By காமதேனு

தேனி அருகே உப்புக்கோட்டையில் திடீரென பற்றிய தீயால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் பற்றி எரிந்து நாசமாகியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி அருகே உப்புக்கோட்டையில் தனியார் பள்ளி அருகே 3 ஏக்கர் பரப்பளவில் தனியாருக்கு சொந்தமான வாழைத்தோட்டம் உள்ளது. இதில் உள்ள வாழை மரங்கள் காய்கள் விட்டு அறுவடைக்கு தயாராக இருந்தன. இந்தத் தோட்டத்தில் நேற்று இரவு திடீரென தீப்பற்றியது. காய்ந்து கிடந்த வாழை சருகுகளில் அந்த தீ எளிதில் பரவி வேகமாக மரங்கள் மீது பரவியது.

பச்சை வாழை மரங்கள் தீப்பற்றியதில் கொழுந்து விட்டு எரிந்தது. இதைக்கண்ட தோட்டத்து பணியாளர் முத்தையா போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ராஜா தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீவிபத்தில் தோட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் எரிந்து நாசமாகின. இந்த தீ விபத்துக்கு சதி வேலை காரணமா அல்லது எதேச்சையாக தீப்பற்றியதா என வீரபாண்டி போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE