பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்

By காமதேனு

வேளாங்கண்ணி கோயில் திருவிழாவினை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு கட்டணத்துடன் கூடிய சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேளாங்கண்ணி கோயில்

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், வேளாங்கண்ணி ஆலய திருவிழாவினை முன்னிட்டு அதிகரித்து வரும் பயணிகளின் வசதிக்காக தாம்பரம் - வேளாங்கண்ணி - தாம்பரம் இடையே சிறப்பு கட்டணத்துடன் கூடிய சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இதன்படி தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இம்மாதம் 28ம் தேதி இரவு 9 மணிக்கு புறப்பட உள்ள சிறப்பு ரயில் (06003) மறுநாள் காலை 4.30 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும். மறு மார்க்கத்தில் 29ம் தேதி இரவு 7.30 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில்(06004) மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும்.

தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகபட்டினம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் 3 டயர் எகானாமிக் குளிர்சாதன வசதி கொண்ட 14 பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 3 பெட்டிகள், இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் 2, மற்றும் சரக்கு பெட்டிகள் 2 ஆகியன இணைக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு தற்பொழுது துவங்கியுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE