மனிதரின் பெருங்குடலில் றெக்கை கட்டிப் பறந்த ஈ... பெரும் குழப்பத்தில் மருத்துவர்கள்

By காமதேனு

அமெரிக்காவில் 63 வயது நபர் ஒருவரின் பெருங்குடலில் உயிருடன் ஒரு ஈ வலம் வந்ததைக் கண்டு மருத்துவர்கள் திடுக்கிட்டுப் போயுள்ளனர். உயிரோடு ஒரு ஈ மனிதக் குடலின் மடிப்புகளில் வசிக்க முடியுமா என்ற விவாதத்தில் மருத்துவ உலகம் பரபரத்துக் கிடக்கிறது.

அமெரிக்கவின் மிசோரியை சேர்ந்த 63 வயது நபர், வழக்கமான உடல் பரிசோதனையின் அங்கமாக கொலொனோஸ்கோபி செய்துகொள்ள அண்மையில் மருத்துவமனை வந்திருந்தார். அமெரிக்கர்கள் மத்தியில் அதிகம் தென்படும் பெருங்குடல் புற்றுநோயை முன்கூட்டியே அடையாளம் காண, கொலொனோஸ்கோபி பரிசோதனை நடைமுறையை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

கொலொனோஸ்கோபி நடைமுறை

வழக்கமான மருத்துவ ஸ்கோப்பி நடைமுறைகளில் ஒன்றாக, கொலொனோஸ்கோபி மேற்கொள்ளப்படும். நீண்ட நெகிழ்வான சிறுகுழாயின் முனையின் பொறுத்தப்பட்ட ஒளி உமிழும் கேமரா உதவியுடன், பெருங்குடலின் உட்புறத்தை மருத்துவர்கள் ஆராய்வார்கள். அப்படியான சோதனையின் போது வித்தியாசமான ஓசையை கேட்டார்கள்.

இதனையடுத்து விரிவான பரிசோதனையை தொடர்ந்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. குடலின் உட்புற மடிப்பு இடுக்கில் ஒரு ஈ உயிரோடு வசித்ததோடு, அவ்வப்போது றெக்கையடித்து குடலுக்குள் பறந்தும் வந்தது. மனித உடலுக்குள் உயிரோடு ஒரு ஈ எப்படி குடித்தனம் நடத்த முடியும் என மருத்துவர்கள் குழம்பிப்போனார்கள்.

மருத்துவர்களின் ஆய்வு முடிவில், மனிதர்கள் உண்ணும் பழங்கள் மற்று காற்கறிகளில் முட்டையாக சேர்பவை, அவற்றை உண்பவரின் வயிற்றுக்குள் செல்லும்போது ஈக்கள் மற்றும் அவற்றின் லார்வாக்களாக குடலில் குடிபுக காரணமாகிறது. முட்டையிலிருந்து முழுமையான வளர்ந்த உயிரினமாக ஈக்கள் மாற உயிருள்ள திசுக்கள் அவசியம். மிகவும் அரிதான நிகழ்வாக, மனித குடலுக்குள் குஞ்சு பொறிக்கும் அவை, குடல் திசுக்களை சார்ந்து வளர வாய்ப்பாகின்றன.

குடலில் ஈ உடன் வந்த மிசோரி நபருக்கு தங்களது வழக்கமான மருத்துவ நடைமுறைகள் வாயிலாக ஈயை மருத்துவர்கள் வெளியேற்றினர். குடலுக்குள் ஈயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அறிகுறிகள் எதையும் உணர்வதில்லை. மருத்துவர்களின் இந்த கூற்றும், ஆய்வும், காய்கனி உள்ளிட்டவற்றை கவனமாக உட்கொள்ள வேண்டியதை வலியுறுத்துகிறது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று BLACK FRIDAY... களை கட்டும் ஆன்லைன் விற்பனை... கம்மி விலையில் கைநிறைய அள்ளலாம்!

சென்னையில் பரபரப்பு... 27 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ் நோய்த்தொற்று!

10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

ரூ.1 கோடி ஹவாலா பணத்துடன் ஆட்டோவில் வந்த கும்பல்! போலீஸாரிடம் பிடித்துக் கொடுத்த ஓட்டுநர்!

அவலம்... இறந்தவரின் உடலை 9 கிமீ தூரம் டோலி கட்டி தூக்கிச் சென்ற மக்கள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE