நகைப்பிரியர்களுக்கு சற்று மகிழ்ச்சியான செய்தி... தங்கம் விலை குறைந்தது!

By காமதேனு

கடந்த சில தினங்களாக விலை ஏற்றத்துடன் விற்பனையான தங்கம் இன்று விலை குறைந்து விற்பனையாவது நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்கத்தின் விலை குறைந்து விற்பனையானது. பண்டிகை முடிந்த நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது.

நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,740 ரூபாயாகவும், ஒரு சவரன் 45,920 ரூபாயாகவும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் 5,735 ரூபாயாகவும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 45,880 ரூபாயாகவும் விற்பனையாகிறது.

அதேபோல 24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, 6,205 ரூபாய்க்கும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து, 49,640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி

வெள்ளி விலையில் எந்தவிதமான மாற்றமும் இன்றி கிராம் வெள்ளி 79.20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி 79,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் காரணமாகவே தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வரும் நாட்களில் தங்கத்தின் விலையில் பெரிய அளவில் எந்தவிதமான மாற்றமும் இருக்காது என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று BLACK FRIDAY... களை கட்டும் ஆன்லைன் விற்பனை... கம்மி விலையில் கைநிறைய அள்ளலாம்!

சென்னையில் பரபரப்பு... 27 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ் நோய்த்தொற்று!

10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

ரூ.1 கோடி ஹவாலா பணத்துடன் ஆட்டோவில் வந்த கும்பல்! போலீஸாரிடம் பிடித்துக் கொடுத்த ஓட்டுநர்!

அவலம்... இறந்தவரின் உடலை 9 கிமீ தூரம் டோலி கட்டி தூக்கிச் சென்ற மக்கள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE