ரூ.10,00,000 அபராதம்... ஏர் இந்தியாவின் சேவை குறைபாடுக்கு இரண்டாம் முறையாக கண்டனம்

By காமதேனு

ஏர் இந்தியா நிறுவனத்தின் சேவைகளில் திருப்தி அடையாத விமானப் போக்குவரத்து இயக்குநரகம், இரண்டாம் முறையாக அந்த நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

பயணிகள் போக்குவரத்தில் பங்களிக்கும் விமானங்கள் மற்றும் அவற்றின் சேவை தொடர்பாக விமானப் போக்குவரத்து இயக்குநரக அதிகாரிகள் அவ்வப்போது அதிரடி ஆய்வு நடத்துவது வழக்கம். அவ்வாறு அண்மையில், கொச்சி, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட விமான நிலையங்களில் விமானப் போக்குவரத்து இயக்குநரக (டிஜிசிஏ) அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

டிஜிசிஏ - ஏர் இந்தியா

கடந்த மே மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெற்ற ஆய்வின்போது ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளுக்கு எதிராக புகார்கள் பெறப்பட்டன. விமானங்களை தாமதமாக இயக்குதல், உகந்த காரணமின்றி விமானங்கள் ரத்து செய்யப்படுதல், விமான பயணிகளை விமானத்தில் ஏற்ற மறுப்பது, பயன்படுத்த முடியாத இருக்கைகளில் பயணித்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காதிருத்தல் உள்ளிட்ட புகார்கள் ஏர் இந்தியா நிறுவனம் மீது கூறப்பட்டது.

இது தொடர்பாக விளக்கம் கேட்டு ஏர் இந்தியா நிறுவனத்திற்கு நவ.3 அன்று விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதனையடுத்து ஏர் இந்தியா அதிகாரிகள், டிஜிசிஏ முன்பாக ஆஜராகி தங்கள் நிறுவனம் மீதான புகார்களுக்கு விளக்கமளித்தனர். ஆனால் அந்த விளக்கங்களில் டிஜிசிஏ திருப்தி அடையவில்லை.

ஏர் இந்தியா விமானம்

பயணிகளின் விமான சேவையில் குறைபாடு உறுதி செய்யப்பட்டதால், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. அண்மைக் காலத்தில் ஏர் இந்தியா நிறுவனம், தனது சேவை குறைபாடுகளுக்காக இரண்டாம் முறையாக தற்போது ரூ.10 லட்சம் அபராதத்துக்கு ஆளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் மீண்டும் ரெய்டு!

கோர விபத்து... லாரி மீது மோதிய ஆட்டோ... தூக்கி வீசப்பட்ட குழந்தைகள்!

கேரள பெண்கள் கிரிக்கெட் அணியின் தூதுவரானார் நடிகை கீர்த்தி சுரேஷ்!

67 வயதில் பத்தாம் வகுப்பில் சேர்ந்த பிரபல நடிகர்!

பகீர்வீடியோ... நடுரோட்டில்எரிந்தபடியேஓடியமாருதிவேன்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE