பயணிகள் கவனத்திற்கு... சென்னையில் 44 மின்சார ரயில்கள் நாளை ரத்து!

By காமதேனு

கோடம்பாக்கம்- தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 44 மின்சார ரயில்கள் நாளை (மார்ச் 3) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மின்சார ரயில்

சென்ன மக்கள் பேருந்து, மெட்ரோ ரயிலை விட மின்சார ரயில்களில் தான் அதிகம் பயணம் செய்கின்றனர். பள்ளி, கல்லூரி, வேலை என லட்சக்கணக்கானோர் மின்சார ரயில்களில் தினசரிர பயணம் செய்கின்றனர். சென்னையில் நானகு வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்ழுடுகின்றன. இதில் கடற்கரை தாம்பரம் இடையேயான வழித்தடம் மிகவும் முக்கியமான வழித்தடமாகும்.

இந்த நிலையில், தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை கோடம்பாக்கம்- தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (மார்ச் 3) சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல தாம்பரத்தில் இருந்து காலை 10.05 மணி முதல் மாலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது

மின்சார ரயில்

சென்னை கடற்கரையில் இருந்து காலை 11 மணி முதல் மதியம் 2.15 மணி வரை செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, செங்கல்பட்டில் இருந்து காலை 9.40 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரையில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு, அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது.

அதே தேதியில் காஞ்சிபுரத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரை வரும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. திருமால்பூரில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில் 25-ம் தேதி ரத்து செய்யப்படுகிறது. மொத்தம் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில்

இந்த நிலையில், பொதுமக்களின் வசதிக்காக நாளை( மார்ச் 3) காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அனைத்து பயணிகளும் தங்களின் பயணங்களை அதற்கேற்ப திட்டமிடுமாறு மெட்ரோ நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இப்படியெல்லாம் வாக்கு சேகரிக்கக்கூடாது... அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

பெங்களூரு ஓட்டலில் டைமர் வெடிகுண்டு வெடிப்பில் தீவிரவாத சதியா?... என்ஐஏ தீவிர விசாரணை!

கோடிக் கணக்கான இளைஞர்களுக்கு அநீதி இழைக்காதீர்கள்... சு.வெங்கடேசன் எம்.பி கொந்தளிப்பு!

4+1 வேண்டும்... பிரேமலதா பிடிவாதம்: அதிமுக- தேமுதிக கூட்டணி நிலவரம்!

சரசரவென குறைந்த பூண்டு விலை...இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE