சமீபத்தில் நடைபெற்ற 72வது பிரபஞ்ச அழகிப் போட்டியில் இந்தியாவின் பன்முகத்தைப் பறைசாற்றும் வகையில் ஸ்வேதா ஷ்ரதா ஆடையணிந்து அசத்தல் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
72வது மிஸ் யுனிவர்ஸ் போட்டி நாளை அதாவது நவம்பர் 18, 2023 சனிக்கிழமையன்று எல் சால்வடாரின் சான் சால்வடாரில் உள்ள ஜோஸ் அடோல்போ பினெடா அரங்கில் நடைபெற உள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள 90 பெண்கள் மிகவும் மதிப்புமிக்கதாக கருதப்படும் இந்த அழகிப் போட்டியில் கலந்து கொண்டு போட்டியிட உள்ளனர். இதில் இந்தியாவின் முகமாக கலந்து கொண்டுள்ள ஸ்வேதா ஷ்ரதா நவீன இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக அதன் பன்முகத்தன்மை, ஒருமைப்பாடு, வலிமை மற்றும் பின்னடைவு ஆகியவற்றைக் குறிப்பிட்டு வடிவமைக்கப்பட்டுள்ள ஆடையை அணிந்திருந்தார்.
இதற்கு கவச உடையணிந்த தெய்வம் ('armoured goddess') என்ற டேக்லைனையும் இந்த உடைக்கு கொடுத்திருந்தார். இந்த ஆடையை நிதி யாஷா வடிவமைத்திருந்தார்.
தேசிய மலரான தாமரை வடிவிலான கிரீடத்தையும் கீழே தேசிய பறவையான மயில் வடிவத்தையும் குறிப்பிடும் விதமாக இந்த ஆடை வடிவமைக்கப்பட்டு இருந்தது. இந்த உடைதான் ரசிகர்களை தற்போது கவர்ந்துள்ளது. சண்டிகரைச் சேர்ந்த ஸ்வேதா மாடல், கோரியோகிராஃபர், நடிகை என பன்முகம் கொண்டவர். நடனத்தில் ஜொலிக்க வேண்டும் என்ற தனது கனவை நிறைவேற்ற பதினாறாவது வயதில் இவர் மும்பைக்கு நகர்ந்தார். ’டான்ஸ் இந்தியா டான்ஸ்’, ‘டான்ஸ் தீவானே’ போன்ற பல நடன ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி... வேர்ல்டு கப் பைனல்... நடிகர் அமிதாப் பச்சனுக்கு தொடர்ந்து மிரட்டல்!
பிக் பாஸ் வீட்டில் ரணகளம்... விசித்ராவுடன் மல்லுக்கட்டிய நிக்ஸன்!
விஜய்சேதுபதி, மஞ்சுவாரியருக்காக புது டெக்னாலஜி... தமிழ் சினிமாவின் அடுத்த பாய்ச்சல்!
வீலிங் செய்து எமனுக்கு காலிங்... டூ வீலரில் இளைஞரின் அட்டகாசம்!
குட் நியூஸ்... இனி புக் செய்த அனைவருக்கும் ரயில் டிக்கெட்; ரயில்வேயின் புதிய திட்டம்!