தக்காளி முதல் தங்கம் வரை... இன்று முதல் இவற்றில் எல்லாம் மாற்றம்!

By காமதேனு

ஆகஸ்ட் மாதத்தின் துவங்கியிருக்கும் நிலையில், இந்த மாதத்தின் முதல் நாளில் இருந்து நிறைய விஷயங்களில் மாற போகும் விலைகள், விதிமுறைகள் என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க.

காசோலை தொடர்பான விதி:

காசோலை தொடர்பான விதியினை பாங்க் ஆப் பரோடா இன்று முதல் மாற்ற உள்ளது. அதன்படி 5 லட்சம் மற்றும் அதற்கு மேலான காசோலைகள் செலுத்துவதற்கு வங்கியால் நேர்மறை ஊதிய முறை அவசியமாக்கப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறைகள்:

ஆகஸ்ட் மாதத்தில் பல பண்டிகைகள் வருவதால் பல்வேறு மாநிலங்களிலும் மொத்தம் 18 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சனி, ஞாயிறு போன்ற வழக்கமான விடுமுறைகளும் அடங்கும்.

எல்.பி.ஜி சிலிண்டர் விலை:

ஒவ்வொரு மாதமும் எல்.பி.ஜி சிலிண்டர் விலை மாதத்தின் முதல் மற்றும் 15ம் தேதி அறிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.93 குறைக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE