மகாபாரதம் காலத்திய சிலை மீட்பு... உத்தரபிரதேசத்தில் மக்கள் பரவசம்

By காமதேனு

உத்தரபிரதேசம் மாநிலத்தில் மகாபாரதம் காலத்திய சிலை உள்ளிட்ட பொருட்கள், நிலத்தடி அகழ்வில் மீட்கப்பட்டதை அடுத்து அப்பகுதி மக்கள் பரவசமடைந்துள்ளனர்.

ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட இதிகாசங்கள் மற்றும் அவை தொடர்பான பாரம்பரிய பெருமைகள் அண்மைக்காலமாக பெருமளவில் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. அயோத்தியில் ராமர் கோயில் நிர்மாணிக்கப்பட்டு அங்கே பாலராமர் சிலை நிறுவப்பட்டதை அடுத்து, மக்கள் மத்தியில் இதிகாசங்கள் மற்றும் அவை தொடர்பான நம்பிக்கைகள் புத்துயிர் பெற்றுள்ளன.

ஞானவாபி மசூதி மற்றும் காசி விஸ்வநாதர் கோயில்

அவற்றில் கணிசமானவை சர்ச்சைக்கும் ஆளாகி வருகின்றன. முகலாயர் படையெடுப்பு மற்றும் ஆட்சிக் காலத்தில், இந்து மதக் கோயில்கள் தகர்க்கப்பட்டு அங்கே இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் எழுப்பப்பட்டதாக பழைய சர்ச்சைகளுடன் புதிய புகார்களும் அதிகரித்துள்ளன. அவை தொடர்பாக நீதிமன்ற வழக்குகள் வரை மேற்படி சர்ச்சைகள் நீட்சி பெற்றுள்ளன.

இவற்றின் மத்தியில் ஆதிகாலத்தில் புதையுண்ட பொருட்கள் ஆங்காங்கே மீட்கப்பட்டும் பக்தர்களுக்கு பரவசம் தந்து வருகின்றன. அவற்றில் ஒன்றாக உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள பச்சௌமி கிராமத்தில், வயல்வெளியில் இருந்து பழங்கால சிலை மற்றும் இதர பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உள்ளூர் விவசாயியான சத்யபால் என்பவர், தனது வயலில் குழி பறித்தபோது இந்த இதிகாச எச்சங்களை அடையாளம் கண்டுள்ளார்.

அயோத்தி ராமர் கோயில்

உள்ளூர் ஆய்வாளர்கள் இந்த சிலை உள்ளிட்டவை மகாபாரத இதிகாச காலத்தைச் சேர்ந்தவை என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இந்திய தொல்லியல் துறை இங்கே முகாமிட்டு ஆய்வினை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. பாண்டவர்கள் தங்கள் வனவாசத்தின் போது இப்பகுதியில் காலம் கழித்துள்ளதாக, ஏற்கனவே வழக்கில் உள்ள தகவலை இந்த அகழ்வில் கிடைத்த சிலை உறுதி செய்துள்ளதாக மக்கள் பரவசத்துடன் பகிர்ந்து வருகின்றனர். இதற்கு முன்னரும் இதே போன்று இதிகாச காலத்து எச்சங்கள் அங்கே கண்டறியப்பட்டுள்ளதால், இம்முறை தொல்லியல் துறை ஆய்வு விரிவாக நடக்கும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

மகளிர் உரிமைத்தொகை நிறுத்தப்பட்டுவிடும்... கனிமொழி எம்.பி., பேச்சு!

24 கேரட் தங்கத்தில் ரூ.3 கோடிக்கு பிறந்த நாள் கேக்... நடிகைக்கு பரிசாக வழங்கிய பிரபல பாடகர்!

கொடூரம்... 2 வயது குழந்தையைக் கடித்துக் கொன்ற தெருநாய்கள்!

ஓடும் ரயிலில் குத்தாட்டம்... இளசுகளின் ரீல்ஸ் மோகத்துக்கு எதிராக ரயில்வே மீண்டும் எச்சரிக்கை

கல்யாணம், கருமாதி, பிறந்த நாள்னு ரேபிஸ்ட்டுக்கு பரோல்... கொந்தளித்த பாடகி சின்மயி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE