கர்நாடகத்தில் வேகமெடுக்கும் குரங்கு காய்ச்சல்; தமிழகத்துக்கு தாவும் அச்சம்... எல்லையில் தீவிர கண்காணிப்பு

By காமதேனு

கர்நாடக மாநிலத்தில் குரங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதால், அதன் தமிழக எல்லைகளில் தமிழ்நாடு சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பினை தொடங்கியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் குரங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. உத்தர கன்னடா, சிவமோகா, சிக்மங்களூரு உள்ளிட்ட மாவட்டங்களில் குரங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேலானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு அப்பால் பலரும் உறுதிபடுத்தப்படாத காய்ச்சலில் அவதியடைந்து வருகின்றனர்.

குரங்கு காய்ச்சல் பாதிப்பு

கர்நாடக மாநிலத்தில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டவர்கள் மத்தியில் இது வரை 2 பேர் பலியாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பரவும் குரங்கு காய்ச்சலை ஆராய அங்கே ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைராலாஜி நிறுவனங்களை சார்ந்தோர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கர்நாடக மாநிலத்தின் உள்ளாக மட்டுமன்றி, அதன் தமிழக எல்லையிலும் குரங்கு காய்ச்சலுக்கான வைரஸ் பரவல் அதிகரித்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இவ்வாறு தமிழகத்தின் எல்லை மாவட்டங்களான கர்நாடகத்தின் மைசூர் மற்றும் ஹாசன் மாவட்டங்களில் பரவல் அதிகரித்ததை அடுத்து, தமிழக அரசும் உஷார்படுத்தப்பட்டது. எனவே தமிழகத்தின் கர்நாடக எல்லைப்பகுதிகளில் தமிழ்நாட்டின் பொதுசுகாதாரத் துறை மற்றும் வனத்துறையின் அலுவலர்கள் தங்கள் ஆய்வினை மேற்கொண்டுள்ளனர். விலங்குளில் குரங்கினங்கள் மட்டுமன்றி பல்வேறு கால்நடைகள் வாயிலாகவும் குரங்குக் காய்ச்சல் பரவும் என்பதால், அவை குறித்தான அறிவுறுத்தல்கள் அங்கே வழங்கப்பட்டு வருகின்றன.

குரங்கு

குரங்கு காய்ச்சல் கண்டவர்கள் வழக்கமான காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன், கூடுதலாக ரத்தப்போக்கு, செரிமானக் கோளாறு, வாந்தி, கடும் தலைவலி உள்ளிட்ட அறிகுறிகளை உணர்வார்கள். ரத்தப் பரிசோதனை வாயிலாக குரங்கு காய்ச்சலை உறுதி செய்யலாம். அப்படியே பாதிப்பு உறுதியானாலும் வழக்கமான காய்ச்சலுக்கான மருத்துவ பராமரிப்பினை தொடர்ந்தால் அதிலிருந்து முழுமையாக அதிலிருந்து விடுபடலாம். ஒரு சிலருக்கு மட்டும், உயிராபத்தை தவிர்க்க கூடுதல் மருத்துவ ஆலோசனை மற்றும் பராமரிப்பு தேவைப்படும். எனவே இப்பகுதிகளில் காய்ச்சல் கண்டவர்கள், அலட்சியம் காட்டாது உடனடியாக மருத்துவரை அணுகுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி!

300 கிலோ எடை, ஆறரை அடி உயரம்... ஜெயலலிதா உருவத்தில் பிரம்மாண்ட கேக்!

முஸ்லிம் திருமணம், விவாகரத்து பதிவுச் சட்டம் ரத்து; விரைவில் அமலுக்கு வருகிறது பொது சிவில் சட்டம்!

திருமணம் செய்ய டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரை கடத்திய தொழிலதிபர்: கூலிப்படையினரும் சிக்கினர்!

காதலனின் கண் முன்னே இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி... 4 சிறுவர்கள் கைது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE