விடுமுறையை கொண்டாட நீலகிரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்; மலைப்பாதையில் கடும் வாகன நெரிசல்!

By காமதேனு

தீபாவளி பண்டிகை விடுமுறை தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் படை எடுத்துள்ளதால் மலைப்பாதைகளில் கடும் வாகன நெரிசல் நிலவி வருகிறது.

தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தீபாவளி பண்டிகை மாநிலம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமையில் வந்திருப்பதால் நாளை திங்கட்கிழமை தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதையடுத்து விடுமுறையை கொண்டாடும் வகையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்தில் குவிந்துள்ளனர்.

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் மலைப்பாதைகளில் வாகன நெரிசல்

உதகையில் உள்ள தாவரவியல் பூங்கா, படகு இல்ல ஏரி, ரோஜா பூங்கா, பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குறித்துள்ளனர். இதே போல் குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்கா, டால்பின் நோஸ், கோத்தகிரியில் உள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சி, நேரு பூங்கா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருப்பதால் உள்ளூர் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உள்ளூர் வியாபாரிகள் மகிழ்ச்சி

இதனிடையே ஏராளமான பொதுமக்கள் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளதால் மலைப்பாதைகளில் கடும் வாகன நெரிசல் நிலவி வருகிறது. மலைப்பாதைகளில் வாகனங்கள் ஊர்ந்தபடி செல்லும் நிலை இருந்து வருகிறது. போலீஸார் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

தீபாவளியன்று இப்படி விளக்கேற்றினால் ஐஸ்வர்ய கடாட்சம் கிட்டும்!

வெடித்து சிதறும் பட்டாசுகள்... 3 மாவட்டங்களில் காற்று மாசு அதிகரிப்பு!

மோடியை அலற வைத்த இளம்பெண்... பிரச்சார பொதுக்கூட்டத்தில் பரபரப்பு!

திருப்பதியில் இன்று தீபாவளி ஆஸ்தானம்... லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!

தனுஷ் முதல் சமந்தா வரை... மூன்றாவது நபர் தலையீட்டால் பிரிந்த பிரபலங்கள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE