தீபாவளி பரிசு: தங்கம் விலை அதிரடியாக குறைந்தது!

By காமதேனு

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிரடியாக உயர்ந்த நிலையில் இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.360 குறைந்தது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம்

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் காரணமாகவே தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நாளை உலகம் முழுவதும் தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், தங்கத்தின் விலை நேற்று கணிசமாக உயர்ந்தது. இதனால் தல தீபாவளி கொண்டாடம் குடும்பங்கள் மற்றும் நகைப்பிரியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை கணிசமாக குறைந்துள்ளது.

தங்கம்

நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,645 ரூபாயாககவும், ஒரு சவரன் 45,160 ரூபாயாகவும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.45 குறைந்து ஒரு கிராம் 5,600 ரூபாயாகவும், சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 44,800 ரூபாயாக விற்பனையாகிறது.

அதேபோல 24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து, 6,070 ரூபாய்க்கும், சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து, 48,560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி

வெள்ளி விலை 1 ரூபாய் குறைந்து கிராம் வெள்ளி 76 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி 76,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE