அதிர்ச்சி; சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு: கும்மிடிப்பூண்டி முதலிடம்!

By காமதேனு

உலக முழுவதும் நாளை தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.100 முதல் 200 வரை காற்று மாசு தரக்குறியீடு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மாதிரி படம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் நேற்று இரவு முதலே மக்கள் பட்டாசு வெடித்து தீபாவளியை வரவேற்க தொடங்கிவிட்டனர். இதனால் நகரின் பல்வேறு இடங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக மாசு காட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். பல்வேறு இடங்களில் காற்றுமாசு தரக்குறியீடு 100 முதல் 200 வரை பதிவாகியுள்ளது.

சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியில் காற்று மாசின் தரம் 230ஆக உயர்ந்துள்ளது. காற்று மாசின் தரம் பெருங்குடியில் 169, அரும்பாக்கத்தில் 134, ராயபுரத்தில் 121, கொடுங்கையூரில் 112 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறு அதிகரித்து சென்றால் இணை நோய் உள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE