விடாத விவசாயிகள் போராட்டம்: ஹரியாணாவில் டிராக்டர் பேரணி... பஞ்சாபில் பாஜக தலைவர் வீடுகளுக்கு தர்ணா

By காமதேனு

ஹரியாணாவில் டிராக்டர் பேரணி, பஞ்சாபில் 3 பாஜக தலைவர்கள் வீடுகள் முன்பாக தர்ணா என விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

பல்வேறு விவசாய சங்கங்களின் கூட்டு ஏற்பாட்டில், தலைநகரை நோக்கிய டெல்லி சலோ பேரணிக்கான முன்னெடுப்புகள் ஹரியாணா எல்லையின் ஷம்பு பகுதியை தாண்டாது தடுத்து வைக்கப்பட்டுள்ளன. அடுத்தடுத்த குழுவாக விவசாயிகள், பஞ்சாபிலிருந்து டெல்லி நோக்கி கிளம்பி வருகின்றனர். ஆனால் அவர்களும் ஹரியாணா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றனர்.

தடுத்து வைக்கப்பட்ட பகுதிகளில் இன்றைய தினம், குருக்ஷேத்ரா, யமுனாநகர் மற்றும் சிர்சா உள்ளிட்ட இடங்களில் டிராக்டர் அணிவகுப்புகளை நடத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தங்களது ஒற்றுமையை வெளிக்காட்டினர். நூற்றுக்கணக்கான டிராக்டர்கள் மூலம் ஊர்வலத்தில் கலந்து கொண்டு, அரசுக்கு எதிராகவும், விவசாயிகள் ஒற்றுமைக்கு ஆதரவாகவும் முழக்கங்களை எழுப்பினர்.

அதே வேளையில் பஞ்சாபில் பாஜக தலைவர்களை குறிவைத்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தை முன்னெடுத்தனர். பாட்டியாலாவில் முன்னாள் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், அபோஹரில் பாஜகவின் பஞ்சாப் பிரிவுத் தலைவர் சுனில் ஜாகர் மற்றும் பர்னாலாவில் கட்சியின் மூத்த தலைவர் கேவல் சிங் தில்லான் ஆகியோரின் இல்லங்களுக்கு வெளியே, விவசாய சங்கத்தினர் தர்ணா நடத்தினார்கள். இதன் தொடர்ச்சியாக, விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து, விவசாய அமைப்புகள் மற்றும் தொழிலாளர் சங்கங்களின் மகா பஞ்சாயத்து கூட்டம் நாளை குருக்ஷேத்திரத்தில் நடைபெற உள்ளது.

விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டம்

வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதம், சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், விவசாயக் கடன் தள்ளுபடி, மின் கட்டண உயர்வு, போலீஸ் வழக்குகளைத் திரும்பப் பெறுதல் மற்றும் லக்கிம்பூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்களின் டெல்லி சலோ பேரணி தொடங்கியிருக்கிறது.

இதையும் வாசிக்கலாமே...


டெல்லியில் அதிர்ச்சி... நேரு ஸ்டேடியம் அருகே இடிந்து விழுந்த கட்டுமானம்; 12 பேரின் கதி என்ன?

விருதுநகர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து... 10 பேர் பலியான பரிதாபம்

டெல்லியில் அதிர்ச்சி... சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து; பதற வைக்கும் வீடியோ!

மகளிர் கிரிக்கெட்; டீம் முன்பு பேருந்தில் மது அருந்திய தலைமை பயிற்சியாளர்!

பகீர்! பட்டப்பகலில் 12ம் வகுப்பு மாணவன் வெட்டிக் கொலை.. 17வயது சிறுவன் வெறிச்செயல்... பதறியோடிய மக்கள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE