வந்தனா சிங்... சிங்கப் பெண்ணா, சர்ச்சையின் நாயகியா?

By காமதேனு

உத்தராகண்ட் மாநிலத்தில் ஆக்கிரமிப்பின் பேரில் இஸ்லாமிய மதரசா மற்றும் மசூதியை அகற்றியது மற்றும் அப்பகுதியில் அமைதியை கொண்டு வர பாடுபடுவது என, வந்தனா சிங் என்ற பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் வரவேற்பு மற்றும் சர்ச்சைக்கு ஒரு சேர ஆளாகி உள்ளார்.

’அரெஸ்ட் வந்தனா சிங்’ என்பது இந்தியாவின் இன்றைய தினத்தின் சமூக ஊடக டிரெண்டிங் முழக்கங்களில் ஒன்று. இதனையடுத்து யாரந்த வந்தனா சிங் எனப் பலரும் இணையத்தை துழாவி வருகின்றனர். இதையொட்டி இவர் சிங்கப்பெண்ணா அல்லது சர்ச்சையின் நாயகியா என்ற விவாதங்களும் இணையத்தில் அதிகரித்துள்ளன.

வந்தனா சிங்

உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் நீதிமன்ற உத்தரவின் பேரில், ஆக்கிரமிப்பு இடத்திலிருந்த மதரசா மற்றும் மசூதி ஆகியவை அண்மையில் அகற்றப்பட்டன. இதனையடுத்து அங்கே வன்முறை வெடித்ததில் 5 பேர் உயிரிழந்ததுடன் ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த விவகாரத்தின் பதற்றம் அங்கே இன்னும் முழுமையாக தணியாததில், ஊரடங்கு அமலில் உள்ளது. துணை ராணுவப் படையினர் அங்கே அமைதியை நிலைநாட்டி வருகின்றன.

மிகவும் சிக்கலான சமூகச் சூழலை திறம்பட கையாண்டதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாஜிஸ்திரேட் பொறுப்பிலான வந்தனா சிங் பாராட்டுக்கு ஆளாகி உள்ளார். நீண்ட காலமாக அரசு நிர்வாகம் தயங்கிய நடவடிக்கையை துணிச்சலாய் கையிலெடுத்து சாதித்திருப்பதாகவும் அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. இதன் மறுபக்கத்தில் அமைதியாக இருந்த ஹல்த்வானியில் இருவேறு பிரிவினருக்கு இடையே பதற்றத்தை உருவாக்கும் வகையில், 20 ஆண்டுகளாக வீற்றிருந்த இஸ்லாமிய வழிபாட்டுத் தலத்தை இடித்து தள்ளியதாக வந்தனா சிங் சர்ச்சைக்கும் ஆளாகி இருக்கிறார்.

நாடெங்கும் மசூதிகளை முன்வைத்து சர்ச்சைகள் வெடித்து வருவதன் மத்தியில், பாஜக ஆட்சியிலான உத்தராகண்ட் மாநிலத்தின் மரியம் மசூதி புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டது ஒரு தரப்பினர் மத்தியில் ஆழமான வடுவாக மாறியுள்ளது. அவர்கள் தரப்பில், வந்தனா சிங்கை கைது செய்ய வேண்டும் என்ற முழக்கம் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. இன்னொரு தரப்பினர் வந்தனா சிங்கை சிங்கப்பெண்ணாகவும் துதித்து வருகின்றனர்.

வந்தனா சிங்

ஹரியானா மாநிலம் நஸ்ருல்கர் பகுதியை சேந்த வந்தனா சிங், உத்தராகண்ட் கேடரின் 2012-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். சிங் கன்யா குருகுல் பிவானியில் சம்ஸ்கிருதத்தில் ஹானர்ஸ் பட்டம் பெற்றவர். ஆக்ராவில் உள்ள பி.ஆர்.அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் எல்எல்பி முடித்துள்ளார். 24 வயதில், வந்தனா சிங் தனது முதல் முயற்சியிலேயே குடிமைத் தேர்வில் 8வது ரேங்க் பெற்றார். உத்தரகாண்ட் மாநிலத்தின் பித்தோராகரின் தலைமை மேம்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 2020-ல் ருத்ரபிரயாக், 2021-ல் அல்மோரா என மாவட்ட மாஜிஸ்திரேட் ஆக நியமிக்கப்பட்ட வந்தனா சிங், தற்போது 2023, மே 17 முதல் நைனிடால் மாவட்டத்தில் பொறுப்பு வகித்து வருகிறார்.

இதையும் வாசிக்கலாமே...


‘ஜோக்கர் இப்போ ஹீரோவானேன்...’ நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷல்!

மிஸ் பண்ணிடாதீங்க... இன்று 17 மாவட்டங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

டெஸ்ட் போட்டியில் இருந்து திடீரென விலகிய அஸ்வின்... ஐசிசி விதியால் சிக்கலில் இந்திய அணி!

அதிர்ச்சி வீடியோ... யானையை காரில் துரத்திய அதிமுக பிரமுகர்: ரூ.1 லட்சம் அபராதம் விதித்த வனத்துறை!

அதிமுக ஆட்சியில் அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை - எஸ்.பி.வேலுமணி உறுதி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE