தீபாவளி பரிசு! விலை குறைந்து வரும் தங்கம்... மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!

By காமதேனு

தீபாவளி நெருங்கி வரும் நிலையில் தங்கம் தொடர்ந்து மூன்றாவது நாளாக விலை குறைந்து விற்பனை செய்யப்படுவது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம்

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் காரணமாகவே தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,670 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 45,360 ரூபாய் ஆகவும் விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் 5,660 ரூபாய் ஆகவும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 45,280 ரூபாய் ஆக விற்பனையாகிறது.

அதேபோல 24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, 6,130 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, 49, 040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி

வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, 76.50 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1000 ரூபாய் குறைந்து 77,500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

VIEW COMMENTS