மாஞ்சோலைக்கு டிரிப் போறீங்களா... என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா?

By காமதேனு

நெல்லை மாவட்டம் மாஞ்சோலைக்கு சுற்றுலா செல்ல பல்வேறு நிபந்தனைகளுடன் தமிழ்நாடு வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலைக்கு ஏராளமானோர், சுற்றுலா செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். இருப்பினும் வனவிலங்குகளின் நடமாட்டம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணமாக மாஞ்சோலைக்கு சுற்றுலா செல்ல தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மாஞ்சோலைக்கு சுற்றுலா செல்ல பல்வேறு நிபந்தனைகளுடன் தமிழ்நாடு வனத்துறை தற்போது அனுமதி வழங்கியுள்ளது.

மணிமுத்தாறு அருவி

இதன்படி நேரடியாக அம்பாசமுத்திரம் துணை இயக்குனர் அலுவலகத்திற்கு சென்று அனுமதி பெற வேண்டிய தேவை இல்லை. மணிமுத்தாறு வனச்சோதனை சாவடிக்கு நேரில் சென்று வனக்காப்பாளரிடமே அனுமதி பெற்று செல்லலாம். ஒரு நாளைக்கு 10 நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். இருசக்கர வாகனம், திறந்தவெளி வாகனம், போன்ற வாகனங்களில் பயணிப்பதற்கு அனுமதி இல்லை. முன்னுரிமை அடிப்படையில் முதலில் வரும் 10 வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும். காலை 8 மணிக்கு உள்ளே சென்று மாலை 5 மணிக்குள் மணிமுத்தாறு வனச்சோதனை சாவடியை கடந்து விட வேண்டும். தவறும் பட்சத்தில் வனவிதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மாஞ்சோலை தேயிலை தோட்டம்

மேலும் காக்காச்சி புல் வெளிப்பகுதி வரை மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் பயணத்தின் போது தடை செய்யப்பட்ட எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள், மதுபானங்கள் மற்றும் பாலித்தீன் பைகள் போன்றவற்றை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. மணிமுத்தாறு வனச்சோதனை சாவடிக்கு நேரில் சென்று அனுமதி பெறும் பட்சத்தில், செல்லும் வாகனத்தின் பதிவு சான்று நகல், வாகன காப்பீடு நகல், ஆதார் நகல் இவைகளை சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும். வாகனத்தில் உள்ள இருக்கைகளின் எண்ணிக்கையை பொறுத்து நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ள வனத்துறை, மணிமுத்தாறு வனச்சோதனை சாவடியில் அனுமதி பெற்று, நுழைவு கட்டணம் செலுத்தி, ரசீது பெற்று பின் செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

மாஞ்சோலை வனப்பகுதியில் மணிமுத்தாறு அருவி, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் ஆகியவை அமைந்துள்ளன. குதிரைவெட்டி என்ற பகுதியில் அரசு சார்பில் வனத்துறை தங்குமிடம் உள்ளது. இங்கிருந்து மணிமுத்தாறு அணை மற்றும் கன்னியாகுமரி அணைகளை பார்த்து மகிழலாம்.

இதையும் வாசிக்கலாமே...


குட்நியூஸ்... வார விடுமுறையை முன்னிட்டு 750 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

பிளஸ் 1, பிளஸ் 2 தனித்தேர்வர்கள் கவனத்திற்கு... அரசு தேர்வுகள் துறை இயக்குநர் முக்கிய அறிவிப்பு!

பெயிண்ட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து... 8 கடைகளில் பரவியதில் 11 பேர் பலி!

மு.க.அழகிரி மீதான வழக்கில் இன்று தீர்ப்பு.... திமுகவில் பரபரப்பு!

பத்தாம் வகுப்பு தேர்வில் அதிரடி மாற்றம்... இனி இதுவும் கட்டாயம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE