‘பெப்பர் ஸ்பிரே எப்படி வேலை செய்கிறது...?’ ஆர்வக்கோளாறு சிறுமியால் சக மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி

By காமதேனு

காஷ்மீரில் அரசு பெண்கள் பள்ளியில் நடைபெற்ற தற்காப்பு பயிற்சி நிகழ்வில், பெப்பர் ஸ்பிரே அடித்து ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஆர்வக்கோளாறு மாணவியால், சக மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தின் ஹந்த்வாரா பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவிகளுக்கான தற்காப்பு சிறப்பு நிகழ்ச்சி இன்று நடத்தப்பட்டது. இதில் பெப்பர் ஸ்பிரே அறிமுகம், பயன்பாடு, அவசியம் குறித்தெல்லாம் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. பெண்கள் தற்காப்பு உபகரணமாக பிரபலமாகி வரும் பெப்பர் ஸ்பிரேவை எப்படி, எப்போது உபயோகிக்க வேண்டும் என்றும் தற்காப்பு நிபுணர்கள் விளக்கம் அளித்தனர்.

பெப்பர் ஸ்பிரே

அப்போது பெப்பர் ஸ்பிரே ஒன்றை ஆராய முயன்ற மாணவி ஒருவர், அதனை சக மாணவிகள் மத்தியில் பிரயேகித்தார். இதில் கூட்டமாக அமர்ந்திருந்த மாணவிகள் கண்களில் பெப்பர் ஸ்பிரே படிந்தது. இதனை அடுத்து அந்த மாணவிகள் அலறித் துடித்தனர். ஒரு சிலர் மயங்கியும் விழுந்தனர். இவ்வாறு அதிகம் பாதிக்கப்பட்ட 12க்கும் மேற்பட்ட மாணவிகள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பெப்பர் ஸ்பிரே

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் இன்றே வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆர்வக்கோளாறில் பெப்பர் ஸ்பிரேயை உபயேகித்த மாணவியும், தனது கண்களில் படிந்த பெப்பர் ஸ்பிரே காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். பெப்பர் ஸ்பிரேவால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் உடல்நலனில் பாதிப்பு ஏதும் இல்லை என்று மருத்துவர்கள் விளக்கமளித்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தினமும் நீட் தேர்வுக்குப் பயிற்சி!

ஊழல் பணம் ரூ.1 லட்சம் கோடியை மக்களின் வங்கிக்கணக்கில் செலுத்துவோம்... ராகுல் காந்தி வாக்குறுதி!

பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை!

விபத்துக்குள்ளான கார்... காப்பாற்றத் துடிக்காமல் மதுப்புட்டிகளை அள்ளிச் சென்ற மக்கள்!

வயிற்று வலி மருந்து என ஹேர் டை குடித்த மாணவிக்கு நிகழ்ந்த சோகம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE