கிடுகிடுவெனக் குறையும் தங்கம் விலை...இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

By காமதேனு

ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில் இன்று சவரனுக்கு 232 ரூபாய் குறைந்துள்ளது நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம்

நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,715 ரூபாயாகவும், ஒரு சவரன் 45,720 ரூபாயாகவும் விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு ரூ.29 குறைந்து ஒரு கிராம் 5,686 ரூபாயாகவும், சவரனுக்கு 232 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 45,488 ரூபாயாக விற்பனையாகிறது.

அதே போல 24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 29 ரூபாய் குறைந்து, 6,156 ரூபாய்க்கும், சவரனுக்கு 232 ரூபாய் குறைந்து, 49,248 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி

வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் 20 காசுகள் குறைந்து, 77 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,200 ரூபாய் குறைந்து 77,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று கர்வா சௌத்: நிலவை ஏன் பெண்கள் சல்லடை வழியே பார்க்கிறார்கள்?! விரத பலன்களைத் தெரிஞ்சுக்கோங்க!

அதிகாலையிலேயே அதிர்ச்சி... சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு! கதறும் பொதுமக்கள்!

பகீர்...நடுரோட்டில் போலீஸ்காரர் மீது கொலைவெறி தாக்குதல்.... அதிர்ச்சி வீடியோ

டிகிரி முடித்தவர்களுக்கு விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு... இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

குட்நியூஸ்... இன்று முதல் மின் கட்டணம் அதிரடியாக குறைப்பு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE