தங்கத்தின் விலை குறைவதால் நகைப்பிரியர்கள் குதூகலம்!

By காமதேனு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் நகைப்பிரியர்கள் மத்தியில் குதூகலம் ஏற்பட்டுள்ளது.

தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தைப் பயன்படுத்தும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. தங்க நகைகள் மீதான பெண்களின் மோகம் இதற்குக் காரணமாக இருக்கிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம் நடைபெறுகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் தங்கத்தின் வலை ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்து வருகிறது.

கடந்த 3-ம் தேதி ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.5,870க்கு விற்பனையானது. இதன் மூலம் சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.46,960க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 160 ரூபாய் குறைந்தது. இதன் மூலம் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.20 குறைந்து ரூ. 5,830க்கும் விற்பனையாகிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 46,640க்கு விற்பனையாகிறது. இதே போல 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,830 ரூபாயாகவும், 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் 6,360 ரூபாயாகவும் விற்பனையாகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE