‘வேலையின்மை குறித்து ஒரு வார்த்தையாவது இருந்ததா?’ இடைக்கால பட்ஜெட்டை இன்னும் விடாத பிரியங்கா காந்தி

By காமதேனு

‘மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் வேலையில்லா திண்டாட்டம் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை’ என குறைபட்டிருக்கிறார் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி வத்ரா.

‘மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தொலைநோக்கு பார்வையோ, திட்டமோ எதுவும் இல்லை என்றும், வேலையில்லா திண்டாட்டம் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு வார்த்தை கூட பேசாதது மிகவும் துரதிர்ஷ்டவசமானது’ எனவும் காங்கிரஸ் பொதுச்செயலரான பிரியங்கா காந்தி தனது எக்ஸ் தள பதிவில் குற்றம்சாட்டியுள்ளார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

’இந்திய மக்கள் எதிர்கொள்ளும் இரண்டு பெரிய பிரச்சனைகளான வேலையின்மை மற்றும் பணவீக்கம் குறித்து மத்திய அரசின் பட்ஜெட்டில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன’ என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். ’புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், வேலையில்லா திண்டாட்டத்தை சமாளிக்கவும் பட்ஜெட்டில் எந்த தொலைநோக்கு திட்டமும் இல்லை. அதேபோல, பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களும் இந்த இடைக்கால பட்ஜெட்டில் ஏமாற்றம் அடைந்துள்ளனர்’ என்று பிரியங்கா பதிவிட்டுள்ளார்.

இடைக்கால பட்ஜெட் வெளியான ஒருநாள் கழித்து பிரியங்கா காந்தி பதிவிட்ட அடுத்தடுத்த பதிவுகளில், பாஜக அரசையும், அதன் கொள்கைகளையும், 10 ஆண்டுகால ஆட்சியின் துயரங்களையு, கூடவே நேற்றைய இடைக்கால பட்ஜெட் அறிவிப்பையும் சாடி உள்ளார். ”பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் அதிகபட்ச சுமைகள் மகளிர் தலையிலேயே விழுகிறது. இதன் மறுபுறம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன, மேலும் அவர்கள் பணியிடத்திலும் பாகுபாடுகளுக்கு ஆளாகிறார்கள்” என்றும் பிரியங்கா காந்தி பதிவிட்டுள்ளார்.

”அரசாங்கத்தின் புள்ளிவிவரங்களின் படியே பார்த்தாலும், தற்காலிக பெண் பணியாளர்கள், அதே பணிக்கான ஆண்களை விட 48 சதவீதம் குறைவாகவே ஊதியம் பெறுகிறார்கள். நிரந்தரப் பணியில் ஈடுபடும் பெண் பணியாளர்களும், ஆண்களை விட 24 சதவீதம் குறைவான ஊதியம் பெறுகிறார்கள். இந்த முரண்பாடுகளை நீக்குவதற்கு இடைக்கால பட்ஜெட்டில் எதுவும் கூறப்படவில்லை" என்றும் பிரியங்கா காந்தி இன்று வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் சாடி உள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

அதிரடி... தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை அறிவித்தார் நடிகர் விஜய்!

பேடிஎம் கணக்கில் உள்ள வாடிக்கையாளர் பணம் என்னாகும்? ரிசர்வ் வங்கி தடையை தொடர்ந்து பேடிஎம் விளக்கம்!

பிரதமரின் வருகையால் ராமேஸ்வரம் கோயிலில் எகிறிய உண்டியல் காணிக்கை - 16 நாளில் இவ்வளவா?

சோகம்... புற்றுநோயால் காலமான நடிகை பூனம் பாண்டே!

வீட்டிற்குள் விழுந்து நொறுங்கிய விமானம்... அதிர வைக்கும் வீடியோ!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE