நேற்றைய பட்ஜெட் அறிவிப்பு மற்றும் இன்றைய பூனம் பாண்டே மரணம்... கேன்சருக்கு எதிரான பிரச்சாரம் வைரல்

By காமதேனு

நேற்றைய மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு மற்றும் இன்றைய நடிகை பூனம் பாண்டே இறப்பு ஆகியவற்றால், இந்தியர்கள் மத்தியில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் குறித்தான பிரச்சாரம் வைரலாகி வருகிறது.

பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோய்களில் ஒன்று கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய். மார்பகப் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக இந்த வகையிலான கேன்சர் மகளிரை அதிகம் பலிகொண்டும் வருகிறது. இந்தியாவிலும் அதன் தாக்கம் அதிகமாகவே உள்ளது. உலகப் பெண்களில் சுமார் 16 சதவீதத்தினர் இந்தியாவில் உள்ளனர். ஆனால் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை பொறுத்தளவில், அதனால் பாதிக்கப்பட்ட பெண்களின் நான்கில் ஒரு பகுதியினர் இந்தியாவில் உள்ளனர்.

மேலும் உலகளாவிய கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இறப்புகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு இந்தியப் பெண்களை பீடிக்கிறது. இந்தியப் பெண்களில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களில் சரிபாதிக்கும் மேலானவர்கள் இறக்கவும் நேர்கிறார்கள். இந்த கர்ப்பப்பை வாய்ப் புற்று நோயின் பாதிப்பை முன்கூட்டியே தடுக்க, இந்தியாவிலேயே தயாரான தடுப்பூசியை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை, நாடாளுமன்றத்தில் தாக்கலான நேற்றை மத்திய இடைக்கால பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க 9 முதல் 14 வயது வரையிலான சிறுமிகளுக்கு தடுப்பூசி போடுவதை அரசு ஊக்குவிக்கும் என அந்த அறிவிப்பில் தெரிவித்தார். இதற்காக இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் ’செர்வாவாக்’ என்ற பெயரிலான ஹெச்பிவி தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்த சுதேசி தடுப்பூசி விரைவில் நாட்டின் 9 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு போடப்பட உள்ளது. இதற்காக பள்ளிகள் வாரியாக கணக்கெடுப்பும் நடைபெற்று வருகிறது.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி தொடர்பான நிதியமைச்சரின் பட்ஜெட் அறிவிப்பு வெளியான அடுத்த நாளே பாலிவுட் மாடல் மற்றும் நடிகையான பூனம் பாண்டே, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு பலியான தகவல் வெளியாகி உள்ளது. குணப்படுத்துவதில் சவாலான இந்த கேன்சர் ரகத்தை, ஹெச்பிவி தடுப்பூசி மூலம் தடுப்பது சுலபம். இதனைத் தொடர்ந்து இணையவெளியில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் குறித்தான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் அதிகரித்துள்ளன. அவற்றினூடே நிதியமைச்சரின் நேற்றைய தடுப்பூசி தகவலும், இன்றைய பூனம் பாண்டே மரணம் குறித்த செய்தியும் வைரலாகி வருகின்றன.

இதையும் வாசிக்கலாமே...


நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை... சாட்டை துரைமுருகன் வீட்டில் சோதனையால் பரபரப்பு!

'#தலைவர் விஜய்'... ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள்!

கோடிகளைக் குவிக்கும் அயோத்தி ராமர்... 10 நாட்களில் 25,000,00 பக்தர்கள் தரிசனம்! 11 கோடி காணிக்கை!

பெரும் பதற்றம்... துணை ராணுவம் குவிப்பு... டெல்லியில் ஆர்ப்பாட்டம்... இரண்டு மாநில முதல்வர்கள் பங்கேற்பு!

மகளிர்க்கு இலவச பேருந்து பயணம்... எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோவை கொளுத்தி போராட்டம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE