இனி அபராதம் விதிக்கப்படாது... சென்னை ஆட்டோக்கள் கிளாம்பாக்கமும் செல்லலாம்!

By காமதேனு

சென்னை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட ஆட்டோக்களை சிஎம்டிஏ எல்லை வரை இயக்க அனுமதித்து, போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

ஆட்டோக்கள்

இதுகுறித்து அவர் அனுப்பிய சுற்றறிக்கையில், "ஒப்பந்த ஊர்திகள் என்ற அடிப்படையில், சென்னை நகர வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட ஆட்டோக்கள், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வர சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலரின் ஒப்புதல் அவசியம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் சென்னை பெருநகரின் எல்லையானது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் வரை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதனால் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட ஆட்டோக்கள், சென்னை பெருநகர எல்லை பகுதிகளுக்குச் சென்றுவர தடையில்லை.

ஆட்டோக்கள்

எனவே, வரும் காலங்களில் சென்னை பெருநகர எல்லை பகுதிகளில் பயணிக்கும்படி அனுமதியளிப்பதாக குறிப்பிட்டு, ஆட்டோக்களுக்கு உரிமம் வழங்கப்பட வேண்டும். இதன் வாயிலாக வீடுகளுக்கோ, தொழில் ரீதியாகவோ சிஎம்டிஏவால் வரையறுக்கப்பட்ட சென்னை பெருநகர எல்லைக்குள் ஆட்டோக்களால் தடையின்றி சென்று வர முடியும்.

அதன்படி, சென்னை பர்மிட் ஆட்டோக்களை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், ராணிப்பேட்டை வரை இயக்கலாம். இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் வரை பயணிகள் சென்னை ஆட்டோக்களில் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி செல்லும் ஆட்டோக்களுக்கு எல்லை தாண்டியதாக இனி அபராதம் விதிக்கப்படாது. அரசின் இந்த புதிய உத்தரவுக்கு தமிழ்நாடு ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...


தினமும் 12 மணி நேர வேலை... வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை: பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு?

ஐஐடி கல்வி நிறுவனத்திற்கு ரூ.110 கோடி நன்கொடை... அள்ளித் தந்த முன்னாள் மாணவரான பிரபல தொழிலதிபர்!

முதுகலை பல் மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு!

வீடு புகுந்து மனைவி, காதலன் வெட்டிக் கொலை: முன்னாள் கணவர் வெறிச்செயல்!

பரபரப்பு...வாகனம் ஏற்றி விவசாய சங்க தலைவர் கொலை?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE