உஷார்... வராக நதியைக் கடக்க வேண்டாம்... சோத்துப்பாறை அணையில் உபரி நீர் திறப்பு!

By காமதேனு

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணையில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், வராக நதியை கடக்க வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் எச்சரித்துள்ளனர்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை, தமிழ்நாட்டின் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது உயரமான அணையாகும். இந்த சோத்துப்பாறை அணை பெரியகுளத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், இரண்டு மலைகளை இணைத்து கட்டப்பட்ட அணையாகும்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்கிற மழைநீர் மற்றும் பேரிஜம் ஏரியில் இருந்து வரும் நீரும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி வழியாக வழிந்தோடி சோத்துப்பாறை அணை வந்தடைகிறது.

சோத்துப்பாறை அணை

சோத்துப்பாறை அணையின் மொத்த உயரம் 126.28 . தொடர் நீர் வரத்து காரணமாக சோத்துப்பாறை அணை முழுமையாக 126 அடியை எட்டியது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி வராக நதியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

வராக நதியில் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டு இருப்பதால் பெரியகுளம், வடுகப்பட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வராக நதியை கடக்கவோ அல்லது அதில் குளிக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் எச்சரித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...


அதிரடி... 10,000 நிறுவனங்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்!

அதிர்ச்சி... இன்று மாலை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது; பயணிகள் அவதி!

உருவானது ஹாமூன் புயல்... 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

துர்கா பூஜை பந்தலில் பயங்கர நெரிசல்... 5 வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்த சோகம்

ராவண வதத்தில் பங்கேற்கும் முதல் பெண்... பிரபல இந்தி நடிகைக்கு குவியும் பாராட்டு

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE