புரட்டாசி முடிஞ்சுடுச்சு... அதிகாலையிலேயே காசிமேட்டில் குவிந்த பொதுமக்கள்!

By காமதேனு

புரட்டாசி மாதம் நிறைவடைந்ததை அடுத்து சென்னை காசிமேட்டில் மீன் வாங்க ஏராளமானோர் குவிந்ததால், அந்த பகுதி முழுவதும் பரபரப்புடன் காணப்படுகிறது.

புரட்டாசி மாதம் ஆன்மிக மாதமாக கருதப்படுவதால், கணிசமான அசைவ பிரியர்கள், புரட்டாசி மாதம் முழுவதும் அசைவ உணவுகளைத் தவிர்த்து விட்டு, விரதம் இருப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் புரட்டாசி மாதம் முடிவடைந்து, இன்று மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இறைச்சி பிரியர்கள், மீன் உள்ளிட்ட இறைச்சிகளை வாங்குவதற்காக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக சென்னை காசிமேட்டில் மீன்கள் வாங்க அதிகாலையிலேயே ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

புரட்டாசி நிறைவு - மீன் வாங்க குவிந்த மக்கள்

அதிகாலை முதலே வியாபாரிகள், பொதுமக்கள் திரண்டதால், காசிமேட்டில் கடும் கூட்டம் காணப்பட்டது. அவர்கள் தாங்கள் விரும்பிய மீன்களை வாங்கி சென்றனர்.

அதேபோல் கடலூர், தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகை, கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் மீன் வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

புரட்டாசி நிறைவு - மீன் வாங்க குவிந்த மக்கள்

மீன் பிரியர்களின் படையெடுப்பால் காசிமேடு மீன்பிடி துறைமுகம், களை கட்டியது. இதனால் மீன் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். வரும் நாட்களில் மீன்கள் விலை மேலும் உயரும் என அவர்கள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE