குட்நியூஸ்... சென்னை திரும்புவதற்கு சிறப்பு ரயில்கள்; கோவை, குமரியிலிருந்து நாளை இயக்கம்!

By காமதேனு

நான்கு நாள் தொடர் விடுமுறைக்காக தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு சென்ற மக்கள் சென்னைக்கு திரும்ப வசதியாக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தைப்பூசத்தை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை தொடங்கி ஞாயிறு வரை நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. அதையொட்டி சென்னையில் வசித்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் படை எடுத்தனர். இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திணறியது. அவ்வளவு பயணிகளுக்கான வசதிகளும், பேருந்துகளும் இல்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த நிலையில் வெளியூர்கள் சென்ற மக்கள் சிரமமின்றி எளிதாக சென்னைக்கு திரும்ப நாளை கன்னியாகுமரி மற்றும் கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோவை சிறப்பு ரயில் இரவு 11.30 மணிக்கும், குமரி சிறப்பு ரயில் இரவு 8.30 மணிக்கும் அந்தந்த ஊர்களில் இருந்து புறப்பட உள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஞாயிற்றுக்கிழமை கோவையிலிருந்து இரவு 11.30க்கு இந்த ரயில் புறப்பட்டு, ஜனவரி 29ம் தேதி நள்ளிரவு 12:10 க்கு திருப்பூரைச் சேருகிறது. அங்கிருந்து நள்ளிரவு 1 மணி அளவில் ஈரோடு வருகிறது.

2 மணிக்கு சேலம், 3: 55 மணிக்கு ஜோலார்பேட்டை, காலை 5 மணிக்கு காட்பாடி, 6:43 க்கு அரக்கோணம், 7:38 மணிக்கு பெரம்பூர் மற்றும் காலை 8:30க்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை இந்த ரயில் வந்து அடைகிறது. 29ம் தேதி மதியம் 1:45க்கு சென்னையில் இருந்து மீண்டும் புறப்பட்டு பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக இரவு 11: 05 மணிக்கு கோவை வந்து சேர்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல குமரியில் இருந்து சென்னைக்கு புறப்படும் சிறப்பு ரயில் நாளை இரவு எட்டு முப்பது மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை சென்னை வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க இன்று இரவு ஸ்பெயின் புறப்படுகிறர் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அன்பு மகளே....இளையராஜா கண்ணீர் பதிவு!

விஜய் எனக்குப் போட்டி என்றால் மரியாதை இல்லை... ரஜினி பரபர பேச்சு!

மூன்று தொகுதிகள் வேண்டும்... முரண்டு பிடிக்கும் கமல்... திகைக்கும் திமுக!

ஆட்சியைக் கவிழ்க்க திட்டம்... 15 எம்எல்ஏக்களை இழுக்க பேரம்... முன்னாள் முதல்வரின் முயற்சியால் பரபரப்பு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE