அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை வலைகளிலிருந்து மீட்ட மீனவர்கள்: ராமநாதபுரத்தில் பாராட்டு விழா

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமநாதபுரம்: கடலில் மீனவர்களின் வலையில் சிக்கிய அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை மீட்டு மீண்டும் கடலிலேயே விட்ட 29 மீனவர்களுக்கு இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று இந்திய வனவிலங்கு நிறுவனம் ஆராய்ச்சியகம் மற்றும் மாவட்ட வனத்துறை இணைந்து அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் வலையில் சிக்கியதை மீட்டு மீண்டும் உயிருடன் பாதுகாப்பாக கடலில் விட்ட மீனவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜகதீஷ் சுதாகர், இந்திய வன விலங்கு நிறுவன ஆராய்ச்சியக ஒருங்கிணைப்பாளர் ஸ்வேதா, வனச்சரக அலுவலர் திவ்யலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில், அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை பாதுகாத்திடும் வகையில், மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கும் பொழுது வலையில் சிக்கிய அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான திமிங்கலம், டால்ஃபின், ஆமை போன்றவற்றை கடலிலேயே பாதுகாப்பாக திரும்ப விட்ட 29 மீனவர்களுக்கு பாராட்டுச்சான்று மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE