தொடர் விடுமுறை... பர்மிட் இன்றி இயக்கினால் ஆம்னி பேருந்துகள் பறிமுதல்; அதிகாரிகள் எச்சரிக்கை

By காமதேனு

ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறை எதிரொலியாக ஆம்னி பேருந்துகளை பர்மிட் இன்றி இயக்கினால் அவை பறிமுதல் செய்யப்படும் என வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தமிழகத்தில் வரும் 23ம் தேதி ஆயுத பூஜையும், 24ம் தேதி விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவிற்கு முன்பு சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் தொடர் விடுமுறையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல பலரும் திட்டமிட்டுள்ளனர்.

ஆயுத பூஜையை முன்னிட்டு ஏற்கெனவே ரயில்களில் முன்பதிவு டிக்கெட் விற்று தீர்ந்துவிட்ட நிலையில், அரசு விரைவு பேருந்துகளிலும் முன்பதிவு முடிந்துவிட்டது. இதனால் ஆம்னி பேருந்துகளை தேர்வு செய்யும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆம்னி பேருந்துகள்

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பயணிகள் பலர் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்து வருவதால் பண்டிகை காலத்தை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இவ்வாறு கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும் 20ம் தேதி இரவு முதல் 25ம் தேதி இரவு வரை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் குழு அமைத்து பேருந்துகளில் ஆய்வு மேற்கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்துகள்

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் அதிகாரிகளிடம் பயணிகள் புகார் அளிக்கலாம். மேலும் உரிய உரிமம் இன்றி ஆம்னி பேருந்துகளை இயக்கினால், சட்டப்படி நடவடிக்கை எடுப்பதோடு, பேருந்து பறிமுதல் செய்யப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

உலகின் நெ.1 கார்ல்சனை வீழ்த்திய தமிழர்.. இளம் சாதனையாளருக்கு குவியும் பாராட்டு!

மீண்டும் வெடித்து சிதறிய வால்நட்சத்திரம்... பூமியை நெருங்கும் ஆபத்து!

லியோ’ விமர்சனம் : இதெல்லாமே பெரிய சறுக்கல்... புலம்பும் ரசிகர்கள்!

வாசகர்களுக்கு ரூ.5,00,000 பரிசு... கவிஞர் வைரமுத்து அறிவிப்பு!

அதிர்ச்சி... ரூ.1,000 கோடி மதிப்புள்ள ஜவுளிகள் தேக்கம்! கதறும் நெசவாளர்கள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE