கிடுகிடுவென உயரும் தங்கம் விலை... அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!

By காமதேனு

அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் விலை குறைந்து விற்பனையான தங்கம், கடந்த சில தினங்களாக விலை ஏற்றத்துடன் விற்பனையாகி வரும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது

தங்கம்

தங்கம் நேற்று ஒரு கிராம் 5,560 ரூபாய்க்கும், ஒரு சவரன் 44,480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று தங்கத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5,585 ரூபாயாகவும், சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 44,680 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே சமயம் 24 கேரட் சுத்த தங்கம், கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து, 6,055 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து, 48,440 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி

வெள்ளியின் விலையில் இன்று 50 காசுகள் குறைந்து ரூ.77.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 77,500 ரூபாயாககவும் விற்பனை செய்யப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE