‘கண்ணாடியில் முகம் பார்த்து 3 வருடமானது...’ சீனாவின் சிறையில் இருந்து விடுதலையான பெண் பத்திரிக்கையாளர் உருக்கம்!

By காமதேனு

சுமார் 3 வருட காலமாக சீனாவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர், இரு நாட்டு பேச்சுவார்த்தையின் கீழ் தற்போது விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

தற்போது 48 வயதாகும் செங் லீ அடிப்படையில் சீனர்; சீனாவில் பிறந்தவர். 10 வயதில் பெற்றோருடன் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்ததில், ஆஸி குடிமகள் ஆனார். படிப்பை முடித்து பத்திரிக்கை துறையில் பணியாற்றியவருக்கு, சீனாவின் அரசு ஊடகத்தில் பணி வாய்ப்பு கிடைத்தது.

அங்கே அரசு சார்பில் ஒளிப்பாகும் சீனா குளோபல் டெலிவிஷன் நெட்வொர்க்கில் ஆங்கில மொழி தொகுப்பாளராக பணிபுரிந்தார். அப்போதுதான் அரசின் தடையை மீறி செயல்பட்டதாக அவர் கைதானார். சுருக்கமான துறை விசாரணை மற்றும் நீதிமன்ற விசாரணையை அடுத்து 2 ஆண்டுகள் 11 மாதங்கள் அவரை தடுப்புக்காவலில் வைக்க உத்தரவானது.

விடுதலையாகி ஆஸ்திரேலியா திரும்பிய செங் லீ

அரசின் ரகசியங்களை வெளிநாட்டை சேர்ந்த சிலருக்கு செங் லீ தெரிவித்ததாக சீனா குற்றம்சாட்டியது. ஆனால் என்ன ரகசியம், எந்த நாட்டுக்கு கடத்தப்பட்டது உள்ளிட்ட விவரங்களை சீனா தெரிவிக்கவில்லை. இடைப்பட்ட சுமார் 3 வருடங்கள், ஆஸ்திரேலியாவில் இருக்கும் தனது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரை பிரிந்து சீனாவின் தடுப்புக்காவலில் சொல்லொண்ணா துயரங்களுக்கு லீ ஆளானார்.

ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பனீஸ் விரைவில் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ள இருப்பதால், இரு நாட்டினர் இடையிலான நல்லெண்ண நடவடிக்கைகளில் ஒன்றாக செங் லீ விடுவிக்கப்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். விடுதலையாகும் நாளில் நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் கழிவறை கண்ணாடியில் தனது முகத்தை 3 வருடங்களுக்கு பின்னர் பார்க்க நேரிட்டதாக அவர் உருக்கமுடன் தெரிவித்திருக்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...

மைதானத்தில் சுருண்டு விழுந்த பிரபல நட்சத்திர வீரர்... பாதியிலேயே வெளியேறிய சோகம்!

போதையில் போலீஸாரிடம் ஆபாசமாக பேசி வாக்குவாதம் செய்த இளம்பெண்!

கதறியழுத ஹன்சிகா ... நாள் முழுக்க உணவும் இறங்கலை!

பட்டாசு வெடிவிபத்து... உடல்களை வாங்க மறுத்து கிராம மக்கள் தொடர் போராட்டம்!

குட் நியூஸ்... தமிழகத்தில் நாளை முதல் இந்த சுங்கச்சாவடி மூடப்படுகிறது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE