ஒரு கிலோ மல்லிகை ரூ.6,000... உச்சம் தொட்ட பூக்களின் விலை; பொதுமக்கள் அதிர்ச்சி!

By காமதேனு

மார்கழி மாதம் முடிந்து தற்போது தை மாதம் தொடங்கி இருக்கிறது தை மாதத்தில் அதிக முகூர்த்த நாட்கள் வருகின்றன. மேலும், இந்த மாதத்தில் கோயில் ஸ்தலங்கள் அனைத்திலும் குடமுழுக்கு போன்ற விசேஷங்கள் நடைபெற்று வருகிறது. பொதுவாகவே முகூர்த்த நாட்களில் பூக்களின் விலை சற்று அதிகமாகவே காணப்படும். இருந்த போதிலும் நெல்லை மாவட்டத்தில் இன்று பூக்களின் விலை வரலாறு காணாத அளவிற்கு கிடுகிடுவென அதிகரித்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு விவசாயத்தை முற்றிலும் பாதித்துவிட்டது. இதனால் பூக்கள் பயிர் செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரம் தற்போது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் பூக்களின் விளைச்சல் முற்றிலும் பாதித்துவிட்டதால் வெளியூர்களில் இருந்து பூக்கள் கொண்டுவரப்பட்டு வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். இதனால் பூக்களின் விலை தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு கிலோ மல்லிகை பூவின் விலை 6,000 ரூபாய்க்கும்,பிச்சுப் பூவின் விலை ஒரு கிலோ 2,500 ரூபாய்க்கும், கேந்தி பூவின் விலை ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. மேலும் கனகாம்பரம்,ரோஜா, முல்லை, பச்சை பூ உட்பட அனைத்து பூக்களின் விலையும் மிகவும் அதிகரித்துள்ளது.

மார்கழி மாதம் முடிந்து தை மாதம் பிறந்திருப்பதாலும், நாளை தான் முதல் முகூர்த்த நாள் என்பதாலும் ஏராளமான பொதுமக்கள் திருமண நிகழ்ச்சிகளுக்காக பூக்களை வாங்கி செல்கின்றனர். அதேபோல் நாளைக்கும், நாளை மறுநாளும் பெரும்பான்மையான இடங்களில் கோவில்களில் குடமுழுக்கு விழா நடைபெறுவதால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த பூக்களின் விலை உயர்வால் பொதுமக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

இரும்பே பயன்படுத்தாமல் கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோயில்... கட்டுமானத்தின் வியக்கவைக்கும் சிறப்பம்சங்கள்!

பாஜகவின் இன்னொரு பொய் மூட்டை தான் நிதி ஆயோக்கின் அறிக்கை: காங்கிரஸ் விமர்சனம்!

தூய்மைப் பணியாளருக்கு குப்பை வண்டியில் உணவு... போலீஸாருக்கு கெட்டுப்போன உப்புமா... இது ஸ்ரீரங்கம் அவலம்!

பாகிஸ்தான் நடிகையை மறுமணம் செய்த சானியா மிர்சாவின் முன்னாள் கணவர்!

வேல ராமமூர்த்தியின் கதையைத் திருடினாரா தனுஷ் பட இயக்குநர்?: சர்ச்சையில் சிக்கிய 'கேப்டன் மில்லர்'!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE