சோகம்... படகு கவிழ்ந்து விபத்து.. பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு... 167 பேர் மாயம்!

By காமதேனு

ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில், படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. மாயமான 167 பேரை தேடும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ ஜனநாயக குடியரசில், சாலை வசதிகள் மிகவும் குறைவாக இருப்பதால், நீர்வழிப் போக்குவரத்து அதிகம் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக காங்கோ ஆற்றில் ஏராளமான பயணிகள் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் உடன் பயணித்துக் கொண்டிருந்த படகு ஒன்று, பாண்டாகா அருகே பாரம் தாங்காமல் ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படகில் பயணித்த சுமார் 167 பேர் மாயமாகியுள்ளனர்.

52 பேர் சடலங்களாக மீட்பு

தகவல் அறிந்த மீட்பு படையினர் உடனடியாக மீட்பு பணிகளை துவக்கிய நிலையில், இதுவரை 52 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிக அளவிலான பயணிகளை படகில் ஏற்றி சென்றதே இந்த விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.

மாயமானவர்களைத் தேடும் பணி

அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள போதும், படகு இயக்குபவர்கள் அதனைப் பொருட்படுத்தாமல், அதிக அளவில் பயணிகளை ஏற்றி செல்வதன் காரணமாக, காங்கோ ஜனநாயக குடியரசில், அடிக்கடி இதுபோன்ற விபத்துக்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE