தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்துகளில் கட்டண உயர்வு?: போக்குவரத்து துறை விளக்கம்

By காமதேனு

அரசு விரைவு பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்படவில்லை எனவும், போக்குவரத்து கழகங்கள் இடையே இருந்த கட்டண வசூல் முறையில் மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது.

சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு முன்பு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. சமீபத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டதை அடுத்து பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகள் இந்த பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் அதற்கு ஏற்றவாறு பேருந்து கட்டணங்கள் மாற்றி வசூலிக்கப்பட்டது.

அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து

இவ்வாறு வசூலிக்கப்படுவதில் பேருந்து கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில் போக்குவரத்து துறை சார்பில் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி போக்குவரத்துக் கழகங்கள் இடையே ஒரே இடத்துக்கு வெவ்வேறு தூரம் கணக்கிடப்பட்டு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது. அரசு விரைவு போக்குவரத்து கழகம் குறைந்த கட்டணம் வசூலித்து வந்த நிலையில், தற்போது அது சரி செய்யப்பட்டுள்ளது.

எஸ்.இ.டி.சி பேருந்து

எனவே, வழக்கமான கட்டணமே தற்போது வசூல் செய்யப்படுவதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு வழித்தடங்களில் கட்டணம் மறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் வரை 35 கிலோமீட்டர் தொலைவிற்கு கட்டணம் ஏற்கெனவே குறைக்கப்பட்டுள்ளது. எனவே, இதன்படி அனைத்து கோட்டப் பேருந்துகளுக்கும் கட்டண மறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அதில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதாக வரும் தகவல் உண்மை இல்லை என போக்குவரத்து துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

தமிழகம் உள்பட அண்டை மாநிலங்களில் 1,120 வழித்தடங்களில் எஸ்.இ.டி.சி அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் டிக்கெட் இயக்க செலவை பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சுங்கச்சாவடி கட்டண உயர்வு, டீசல் விலை உயர்ந்தாலும் கூட கட்டணம் என்பது அதிகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

பிரதமர் இன்று தமிழகம் வருகை... ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோயில்களில் நாளை வழிபடுகிறார்!

ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை... பிரதமர் மோடி வருகையால் திடீர் கட்டுப்பாடு!

கருவறையில் நிறுவப்பட்ட ராமர் சிலை... வெளியானது முதல் புகைப்படம்!

சென்னையில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை... அமலாக்கத் துறையும் அதிரடி!

'அன்னபூரணி' பட விவகாரம்... வருத்தம் தெரிவித்தார் நயன்தாரா!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE