இயற்கையைப் போல தமிழையும் போற்றுவோம்... இந்து தமிழ் திசை ஆசிரியர் அசோகன்!

By காமதேனு

இறைவனையும், இயற்கையையும் போற்றுவதைப்போல தாய் மொழி தமிழையும் போற்றிக்கொண்டே இருக்க வேண்டும் என இந்து தமிழ் திசை ஆசிரியர் கே அசோகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ் திரு விருது வழங்கும் விழா

இந்து தமிழ் திசை' நாளிதழ் 2013 செப்.16-ல் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டு நிறைவின் போதும் வாசகர் திருவிழா நடத்தப்பட்டு வந்தது. அதைத் தொடர்ந்து தமிழ் ஆளுமைகளுக்கு மணிமகுடம் சூட்டி மகிழும் விதமாக 2017 முதல் 2019, 2022 ஆகிய ஆண்டுகளில் 'தமிழ் திரு' விருதுகள் வழங்கும் விழாக்களும் நடத்தப்பட்டு வருகிறது.

நான்காவது ஆண்டாக ராம்ராஜ் காட்டன் வழங்கும் 'இந்து தமிழ் திசை - யாதும் தமிழே 2023' விழா சென்னை காமராஜர் அரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் 'இந்து தமிழ் திசை' நாளிதழ் ஆசிரியர் கே.அசோகன் அனைவரையும் இன்முகத்தோடு வரவேற்று பேசினார்.

"தகதகக்கும் சூரியனுக்கும், தங்கமயமாக ஒளி வீசும் நிலவுக்கும் அறிமுகம் தேவையில்லை. அதன் சிறப்புகளை யாரும் பரப்பவும் தேவையில்லை. தாய்த் தமிழ் மொழிக்கும் அந்த சிறப்பு உண்டு. இருந்தாலும் சில விஷயங்களை உடற்பயிற்சி போன்று தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும்.

தமிழின் புகழை இன்னொருவர் கூறி தமிழ் வளர வேண்டியதில்லை, வாழ வேண்டியதில்லை. ஆனாலும் இறைவனையும், இயற்கையையும் போற்றுவதைப் போல தாய் மொழி தமிழையும் போற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

அப்போதுதான் அம்மொழி மென்மேலும் செழுமையையும், சிறப்பையும் அடையும். இதில் ஒரு நாளிதழாக இணைந்து, செய்தி வெளியிடுவது மட்டும் நமது வேலை என்று நின்றுவிடாமல், நமக்கு சோறு போடுகின்ற, நமக்கு வாழ்வளிக்கின்ற தாய்த் தமிழுக்கு வேறு எப்படி எல்லாம் மரியாதை செய்ய முடியும் என்று சிந்தித்ததன் விளைவுதான் இந்த 'தமிழ் திரு' விருது வழங்கும் விழா.

இவ்விழா, தமிழாய்ந்த அறிஞர்களை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் எப்படி கவுரவப்படுத்த முடியும் என்று பார்த்து, அவர்களுக்கு உரிய கவுரவத்தை செய்வதற்காக மட்டும் ஏற்படுத்தப்பட்டது இல்லை.

இந்த அறிஞர்கள் ஏதோ ஒரு வகையில் 'இந்து தமிழ் திசை' நாளிதழுடன் சேர்ந்து பணிபுரிந்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் மூலம் தமிழ் மொழியின் சிறப்பை அறிவியல் தமிழாக, வரலாற்று தமிழாக, இலக்கிய தமிழாக கூற, நாங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கிறோம்.

வாசகர்களாகிய நீங்கள் தான் எங்களை ஆளும் மன்னர்கள். இந்து தமிழ் திசையின் இந்த 10 ஆண்டுகளில் திரும்பத் திரும்ப செதுக்கி செதுக்கி நாளிதழை வழி நடத்தியவர்கள் நீங்கள் தான். இந்நாளிதழ் என்றென்றும் சிறப்புடன் பயணிக்க வாசகர்களின் வாழ்த்துக்கள் வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று நவராத்திரி திருவிழா ஆரம்பம்... என்னென்ன விசேஷம்? எப்படி கொண்டாடுவது?!

கருணாநிதியின் ‘மூத்த பிள்ளை’க்கு வந்த சோதனை!

ஒரு சிக்ஸர் கூட அடிக்கலை… 20 ஓவரில் 427 ரன்கள் எடுத்து மகளிர் கிரிக்கெட் அணி உலக சாதனை!

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்… மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!

ஜீன்ஸ், லெக்கின்ஸ் போட்டு கோர்ட்டுக்கு வரக்கூடாது... வக்கீல்களுக்கு பார் கவுன்சில் கறார் உத்தரவு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE